மகுனி சரண் தாசு

கோட்டிபுவா நடனக் கலைஞர், குரு

மகுனி சரண் தாசு (Maguni Charan Das) ஒடிசாவின் பாரம்பரிய நடன வடிவமான கோட்டிபுவாவின் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார்.

மகுனி சரண் தாசு
பிறப்புஇரகுராஜ்பூர், பூரி மாவட்டம், ஒடிசா, இந்தியா
இறப்பு5 திசம்பர் 2008
இரகுராஜ்பூர், பூரி மாவட்டம், ஒடிசா, இந்தியா
பணிபாரம்பரிய நடனக் கலைஞர்
அறியப்படுவதுகோட்டிபுவா நடனம்
விருதுகள்பத்மசிறீ
ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது
துளசி விருது

வாழ்க்கை தொகு

இவர், தசபுஜா கோதிபுவா ஒடிசி நிருத்ய பரிசத் என்ற கோட்டிபுவா நடனப் பள்ளியின் நிறுவனர் ஆவார். அங்கு கலை வடிவம் பாரம்பரிய குருகுல முறையில் கற்பிக்கப்படுகிறது. [1] இந்திய மாநிலமான ஒடிசாவின் பூரி மாவட்டத்திலுள்ள இரகுராஜ்பூரில் பிறந்த இவர், ஒடிசியின் பாரம்பரிய நடன வடிவத்தின் முன்னோடியாக பரவலாகக் கருதப்படும் கோட்டிபுவா பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கு பங்களித்ததாக அறியப்படுகிறது.[1] இவரது நடண பாணி கோட்டிபுவாவின் இரகுராஜ்பூர் கரானா என்று அறியப்படுகிறது [2] மேலும் இவரது பள்ளி மாணவர்களின் கல்விக் கல்வியை கவனித்துக்கொள்வதன் மூலம் நடனத் துறையில் பயிற்சி அளிக்கிறது. இவர் ஒடிசா சங்கீத நாடக அகாதமி விருது மற்றும் துளசி விருது பெற்றவர். [1] கோதிபுவா நடனத்திற்கான இவரது பங்களிப்புகளுக்காக இந்திய அரசாங்கம் 2004-ஆம் ஆண்டில் இந்தியக் குடிமக்களின் நான்காவது உயரிய பத்மசிறீ விருதை இவருக்கு வழங்கியது.[3]

இறப்பு தொகு

தாசு 5 திசம்பர் 2008 அன்று இறந்தார். [4]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "God's Little Dancers: The Gotipua Tradition of Odisha". Craft Revival. 2015. Archived from the original on நவம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் November 23, 2015.
  2. "Bold Troupers of a Folksy Dance Cult". Indian Express. 13 December 2014. பார்க்கப்பட்ட நாள் November 23, 2015.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  4. "Eminent dancer Guru Maguni Charan Das dies". Orissa Diary. 5 December 2008. Archived from the original on 24 November 2015. பார்க்கப்பட்ட நாள் November 23, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுனி_சரண்_தாசு&oldid=3590524" இலிருந்து மீள்விக்கப்பட்டது