மகுல் உயன இலங்கையின் பண்டைக்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் இசுருமுனிய விகாரை, திஸ்ஸ வாவி ஆகியவற்றுக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு பூங்கா. இது தற்போது அழிபாடாக உள்ளது. இப்பூங்காவில் பல குளங்களும், சிறிய கட்டிடங்களும் இருந்தன. மரபுக் கதைகளின்படி இளவரசன் சாலியவும், அசோகமாலாவும் இந்தப் பூங்காவிலேயே சந்தித்துக்கொண்டதாக நம்பப்படுகிறது.

மகுல் உயனவின் இன்றைய நிலை

வரலாறு தொகு

மகுல் உயன, திஸ்ஸ மன்னனின் காலத்தில் (கி.மு 3 ஆம் நூற்றாண்டு) திஸ்ஸ வாவி கட்டப்பட்டபோதே உருவாக்கப்பட்டது. எனினும் தற்காலத்தில் இப்பூங்காவில் காணப்படும் களியாட்ட மண்டபமும், பிற அமைப்புக்களும் 8 - 9ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிக்கு உரியவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகுல்_உயன&oldid=2466043" இலிருந்து மீள்விக்கப்பட்டது