மகேந்திர சிங் பதி

இந்திய அரசியல்வாதி

மகேந்திர சிங் பதி (Mahendra Singh Bhati) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உத்தரபிரதேசத்தின் தாத்ரி நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்.[1][2] மகேந்திர சிங் பதியும் இவரது நண்பர் உதய் பிரகாசு ஆர்யா ஆகியோர் தாத்ரி ரயில் நிலையம் அருகே 13 செப்டம்பர் 1992 அன்று ஆயுதமேந்திய ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3]

மகேந்திர சிங் பதி
Mahendra Singh Bhati
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில்
1985–1992
முன்னையவர்விஜய் பால்
பின்னவர்சமீர் பதி
தொகுதிதாத்ரி, உத்தரப் பிரதேச சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு13 செப்டம்பர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசனதா தளம்
பிள்ளைகள்சமீர் பதி
வாழிடம்கௌதம புத்தா நகர் மாவட்டம்
தொழில்அரசியல்வாதி

1992 ஆம் ஆண்டில் மகேந்திர சிங் பதியைக் கொன்றதற்காக முன்னாள் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. யாதவ் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு 28 பிப்ரவரி 2015 அன்று அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Dadri Assembly constituency election results". elections.in. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  2. "Dadri Assembly constituency election results". Result University. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
  3. "Former MP DP Yadav sentenced to life imprisonment". Times of India. 11 March 2015. http://timesofindia.indiatimes.com/india/Former-MP-DP-Yadav-sentenced-to-life-imprisonment/articleshow/46515203.cms. 
  4. Singh, S.P.; Manoj, Kumar (11 March 2015). "23 years after Bhati's death, DP Yadav gets life term". Daily Pioneer. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_சிங்_பதி&oldid=3538689" இலிருந்து மீள்விக்கப்பட்டது