மக்களாட்சித் திரளணி

மக்களாட்சித் திரளணி (கிரேக்க மொழி: Δημοκρατικός Συναγερμός) சைப்பிரஸ் நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அந்தக் கட்சி 1976-ம் ஆண்டு கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் என்பவரால் துவக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவர் நீக்கோஸ் அனஸ்தாசியாதிஸ் இருந்தார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு NEDISY ஆகும்.

2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 127 776 வாக்குகளைப் (30.3%, 18 இடங்கள்) பெற்றது.

2002 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த கிலாஃப்கோஸ் கிலெரிடெஸ் அவர்கள் 160 724 வாக்குகளைப் பெற்றார் (38.8%).

இந்தக் கட்சி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் 2 இடங்களைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்களாட்சித்_திரளணி&oldid=1344763" இலிருந்து மீள்விக்கப்பட்டது