மஞ்சள் நிறமி 16

ஒரு டையரைலைடு சாயம்

மஞ்சள் நிறமி 16 (Pigment Yellow 16) என்பது C34H28Cl4N6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறமாக பயன்படுத்தப்படும் இந்நிறமி ஒரு டையரைலைடு சாயமாக வகைப்படுத்தப்படுகிறது. நிறந்தர மஞ்சள் சாயமாக கருதப்படும் இதன் குறியீட்டு எண் 20040 ஆகும் [1].

மஞ்சள் நிறமி 16
இனங்காட்டிகள்
5979-28-2
ChemSpider 20921
EC number 227-783-3
InChI
  • InChI=1S/C34H28Cl4N6O4/c1-17-13-21(5-9-27(17)39-33(47)31(19(3)45)43-41-29-11-7-23(35)15-25(29)37)22-6-10-28(18(2)14-22)40-34(48)32(20(4)46)44-42-30-12-8-24(36)16-26(30)38/h5-16,31-32H,1-4H3,(H,39,47)(H,40,48)/b43-41+,44-42+
    Key: JFMYRCRXYIIGBB-CHQNLTHESA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22288
  • Clc1cc(Cl)ccc1/N=N/C(C(=O)C)C(=O)Nc2ccc(cc2C)-c3cc(C)c(cc3)NC(=O)C(C(=O)C)/N=N/c4ccc(Cl)cc4Cl
பண்புகள்
C34H28Cl4N6O4
வாய்ப்பாட்டு எடை 726.44 g·mol−1
தோற்றம் மஞ்சள் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டைகீட்டீனைப் பயன்படுத்தி ஆர்த்தோ தொலுடினை அசிட்டோ அசிட்டைலேற்றம் செய்வதன் வழியாக இச்சேர்மத்தைத் தயாரிக்கலாம். வினையில் விளையும் பிசு அசிட்டோ அசிட்டைலேற்ற சேர்மமானது 2,4-டைகுளோரோ அனிலினிலிருந்து பெறப்பட்ட இருசம ஈரசோனியம் உப்புடன் சேர்த்து பிணைப்பு வினைக்கு உட்படுத்தப்படுகிறது [2].

மேற்கோள்கள் தொகு

  1. "The Color of Art Pigment Database: Pigment Yellow, PY". Art is Creation.
  2. K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_நிறமி_16&oldid=2615536" இலிருந்து மீள்விக்கப்பட்டது