மடிப்பாக்கம்

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

மடிப்பாக்கம் (ஆங்கிலம்: Madipakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டததில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் வேளச்சேரிக்கும், நங்கைநல்லூருக்கும் அருகில் அமைந்து இருக்கிறது.

மடிப்பாக்கம்
மடிப்பாக்கம்
இருப்பிடம்: மடிப்பாக்கம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°57′53″N 80°11′46″E / 12.964700°N 80.196100°E / 12.964700; 80.196100
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் சோழிங்கநல்லூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. அருணா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 14,940 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


34 மீட்டர்கள் (112 அடி)

பெயர்க் காரணம் தொகு

மடிப்பாக்கத்தின் தெற்குப் பகுதியில் மடு ஒன்று உண்டு. பல்லாவரம், திரிசூலம் குன்றுகளிலிருந்து மழைக்காலத்தில் பெருகும் நீரின் வடிகாலாக இது செயல்பட்டது. இந்த மடுவின் வழியாகவே பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதிக்கு நீர் பாயும். மடுப்பாக்கம் என்பதே மறுவி மடிப்பாக்கம் ஆனது.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,940 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மடிப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 88% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 85% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மடிப்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோவில்கள் தொகு

புகழ் பெற்ற ஐயப்பன் கோவில் மடிப்பாக்கத்தில் அமைந்துள்ளது. பொன்னியம்மன், ஒப்பிலியப்பன், வேதபுரீசுவரர் சிவன் கோவில் மற்றும் சில கோவில்களும் இங்கு உள்ளன. சனவரி முதல் தேதி அன்று ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூசைகளும் அன்னதானமும் வருடம் தோறும் நடைபெறுகின்றன.

கல்வி நிலையங்கள் தொகு

  • சாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  • சாய்ராம் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி
  • பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி
  • ஹோலி ஃபேமிலி பள்ளி
  • ஹோலி பிரின்ஸ் பதின்நிலைப் பள்ளி

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

அமைவிடம் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மடிப்பாக்கம்&oldid=3851939" இலிருந்து மீள்விக்கப்பட்டது