மட்டச்சிகரி

மட்டச்சிகரி அல்லது மட்டநுனிப்பூந்துணர் (Corymb) என்பது தாவரங்களில் உள்ள மலர்களைத் தாங்கிய மஞ்சரி ஆகும். இந்த வகை மஞ்சரியில் விளிம்புகளில் உள்ள மலர்கள் நீண்ட மலர்க்காம்புகளையும் உள்வட்டத்தில் உள்ள மலர்கள் சிறிய மலர்க்காம்புகளையும் கொண்டுள்ளன. பார்ப்பதற்கு மஞ்சரியில் உள்ள அனைத்து மலர்களும் ஒரே மட்டத்தில் காணப்படுகிறது. மேற்பக்கம் தட்டையானதாக, மேலோட்டமாக பார்ப்பதற்கு அம்பெல் (குடைப்பூந்துணர்) வகையை ஒத்ததாகவும், கூட்டுப் பூத்திரள் போன்ற கிளையமைப்பையும் கொண்டுள்ளன. இவ்வகையான மஞ்சரியில் மலர்களின் அமைப்பு இணையாகவோ அல்லது குறுக்கு மறுக்காகவோ அமைந்து குவிந்தோ அல்லது தட்டையாகவோ தோற்றமளிக்கிறது.

மலாய்டியே குடும்பத்தில் பல சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் ஹாத்தார்ன்ஸ் மற்றும் ரோவன்ஸ் போன்ற சிற்றினங்களில் மட்டச்சிகரி வகை மஞ்சரியில் மலர்கள் அமைந்து காணப்படுகிறது. "நார்வே மேப்பிள்", "யெர்பா மேட்" போன்றவைகளும் மட்டச்சிகரி வகை மஞ்சரிக்கு உதாரணங்களாகும்.

மட்டச்சிகரியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் corymb என்பது பண்டைய கிரேக்கச் சொல்லான "korymbos" என்பதிலிருந்து தோன்றியது. இக்கிரேக்கச் சொல்லுக்கு "மலர் அல்லது பழக் கொத்து" என்பது பொருளாகும்.[1]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Brown, Roland Wilbur (1956). The Composition of Scientific Words. Washington, D.C.: Smithsonian Institution Press. p. 214.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டச்சிகரி&oldid=3810555" இலிருந்து மீள்விக்கப்பட்டது