மதுசிறீ நாராயணன்

மதுசிறீ நாராயண் (Madhushree Narayan) (பிறப்பு: பிப்ரவரி 4, 1999) ஒரு இளம் இந்திய பின்னணி பாடகராவார். இவர் 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான கேரள மாநில திரைப்பட விருதுகளையும், 2014இல் கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதையும் பெற்றுள்ளார்.[1]

மதுசிறீ நாராயணன்
2015இல் மதுசிறீ
பிறப்பு9 பெப்ரவரி 1999 (1999-02-09) (அகவை 25)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிபின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2003 – தற்போது வரை
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை
இணையதளம்www.madhushreenarayan.com

இவர், மூன்று வயதிலிருந்தே பாடிக்கொண்டிருக்கிறார்.[2] பத்ம விபூசண் பண்டிட் ஜஸ்ராஜின் கீழும், தனது தந்தை இரமேசு நாராயணனிடமிருந்தும் முறையாக இசையைக் கற்கத் தொடங்கினார். தற்போது, பண்டிட் அஜய் போகங்கரிடமிருந்து தும்ரியின் நுணுக்கங்களையும் பாணிகளையும் கற்றுக் கொண்டிருக்கிறார்.[3][4]

மலையாளத்தில் 'மக்கல்கு' படத்தில் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டில் இன்னும் வெளியிடப்படாத 'ஓடுதளம்' என்ற தமிழ் திரைப்படத்தில் தனது தந்தையின் இசையில் ஒரு பின்னணி பாடகியாக அறிமுகமானார். எடவப்பதி, என்னு நின்டே மொய்தீன் , ஆதாமிண்டெ மகன் அபூ, ஆலிஃப் (2015), மக்கல்கு, ஒட்டமந்தாரம் [5], ஒயிட் பாய்ஸ் (2014), பாதி (2016) ஆகிய படங்களில் பாடல்களுக்காகவும் இவர் குரல் கொடுத்தார். மேலும் தனது இசையில் பல பாடல்களைப் பாடினார். ஊர்வி என்ற படத்திற்காக 2017 ஆம் ஆண்டில் கன்னடத்தில் அறிமுகமானார்.

குறிப்புகள் தொகு

  1. "Singer Madhushree Narayan is hitting all the right notes". The Hindu. 16 September 2015. http://www.thehindu.com/features/metroplus/madhushree-narayan-hits-the-right-notes-in-mollywood/article7659265.ece. பார்த்த நாள்: 16 January 2016. 
  2. "Music is all I think about: Madhushree Narayan". Timesofindia. 16 January 2017. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/music/Music-is-all-I-think-about-Madhushree-Narayan/articleshow/45898547.cms. பார்த்த நாள்: 16 January 2017. 
  3. "Madhushree Narayan shines bright in light music at School Arts Festival". Mathrubhumi. 18 January 2017 இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170119185021/http://english.mathrubhumi.com/specials/youth/kalolsavam-2017/stories/madhushree-narayan-shines-bright-in-light-music-at-school-arts-festival-kerala-kalolsavam-1.1664368. பார்த்த நாள்: 20 January 2017. 
  4. "This Music Day, a visit to a home of Hindustani music". Mathrubhumi. 20 June 2016 இம் மூலத்தில் இருந்து 27 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160627085639/http://english.mathrubhumi.com/specials/movies-music/music-day-2016/this-music-day-a-visit-to-a-home-of-hindustani-music-english-news-1.1144696. பார்த்த நாள்: 20 June 2016. 
  5. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுசிறீ_நாராயணன்&oldid=3706947" இலிருந்து மீள்விக்கப்பட்டது