மதுரை பாந்தர்ஸ்

மதுரை பாந்தர்ஸ் ( சியாச்செம் மதுரை பாந்தர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) மதுரை நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியாகும்.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் இரண்டு ஆண்டுகளில் மதுரை சூப்பர் ஜயண்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்த அணி, தொடரின் தோல்விகரமான அணியாக இருந்தது. [1] டி.என்.பி.எல் இன் மூன்றாவது பதிப்பில், இந்த அணி சீயாச்செம் டெக்னாலஜிஸால் வாங்கப்பட்டது, மேலும் அந்த பதிப்பில் டி.என்.பி.எல் இன் சாம்பியனாக உருவெடுத்தது. [2] அணியின் தற்போதைய உரிமையாளர் பூஜா தாமோதரன். அணியின் தலைமை பயிற்சியாளர் டி.கணேஷ், கேப்டன் அருண் கார்த்திக் ஆவர். [3]

அணி தொகு

  • அருண் கார்த்திக் (கேப்டன்)
  • ஆதித்யா கிரிதர்
  • ஆகாஷ் சும்ரா
  • ஷிஜித் சந்திரன்
  • ஜே ஜாபஸ் மோசஸ்
  • சுதன் காண்டீபன்
  • சபின் கர்னாவர்
  • ஆர் கார்த்திகேயன்
  • எல் கிரண் ஆகாஷ்
  • ஜே கவுசிக்
  • டி.டி லோகேஷ் ராஜ்
  • ஆர் மிதுன்
  • எஸ்.வி.முருகானந்தம்
  • ஆர் நிலேஷ் சுப்பிரமணியன் (குச்சக்காப்பாளர்)
  • எம்.எஸ் பிரமோத்
  • தாமோதரன் ரோஹித்
  • ஏ. சரத் ராஜ்
  • என் செல்வ குமரன்
  • ரஹில் ஷா
  • அபிஷேக் தன்வார்
  • தலைவன் சர்குனம்
  • துஷார் ரஹேஜா
  • வருண் சக்ரவர்த்தி
  • டி வீரமணி [4]

சாதனைகள் தொகு

  • திண்டுக்கல் டிராகன் அணியை வீழ்த்தி 2018 ஆம் ஆண்டின் டிஎன்பிஎல் பதிப்பை மதுரை பாந்தர்ஸ் வென்றது. [5] [2]
  • தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் முதல் இரண்டு ஆண்டுகளில் தொடரின் தோல்விகரமான அணியாக இருந்தது. விளையாடிய 14 ஆட்டங்களில் எந்த வெற்றியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Siechem Madurai Panthers Team, Squad, News & Results". www.sportskeeda.com (in ஆங்கிலம்).
  2. 2.0 2.1 "Cricket scorecard - Dindigul Dragons vs Madurai Panthers, Final, Tamil Nadu Premier League, 2018". Cricbuzz (in ஆங்கிலம்).
  3. https://www.siechemmaduraipanthers.com/
  4. http://www.espncricinfo.com/ci/content/squad/1194510.html
  5. https://thesportsrush.com/tnpl-2018-most-runs-most-wickets-and-results-tamil-nadu-premier-league-2018-points-table/
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_பாந்தர்ஸ்&oldid=2779775" இலிருந்து மீள்விக்கப்பட்டது