மனித நாவின் சுவை வரைப்படம்

மனித நாவில் சுவைகள் உணரப்படும் பகுதிகளை குறிக்கும் வரைப்படம் மனித நாவின் சுவை வரைப்படம் எனப்படுகிறது. இது மனித நாவில் வெவ்வேறு சுவைகளை அறியவல்ல சுவையறியும் கலங்கள் வெவ்வேறான பகுதிகளில் செறிவாக அமைந்துள்ளன என்றக் கோட்பட்ட்டின் படியானதாகும். பின்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இக்கோட்பாகு பிழையென் அறியப்பட்டது. எனவே இன்று மனித நாவின் சுவை வரைப்படம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் சார் வரைப்படமல்ல.

வரலாறு தொகு

யேர்மன் மொழியில் 1901 ஆம் எழுதப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையை மொழிபெயர்த்து ஆர்வர்டு பல்கலைகழக உளவியலாளர் எட்வின் ஜி. போரிங் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றின் மூலம் தோன்றியதாகும். [1] மூல ஆய்வுக்கட்டுரையில் இருந்த தகவல்கள் பிழையாக பிரநித்துவப் படுத்தபட்டமையால் நாவின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மூல சுவையை உணர்வதாக முடிவெடுக்கப்பட்டது.[2]

வரைப்படம் தொகு

 
இன்று ஏற்றுக் கொள்ளப்படாத மனித நாவின் சுவை வரைப்படம்.

இன்று ஏற்றுக் கொள்ளப்படாத மனித நாவின் சுவை வரைப்படம் நான்கு சுவைப் பகுதிகளைக் கொண்டிருக்கிறது:

  1. நாவின் பின்புறம்: கசப்பு சுவை.
  2. நாவின் பின்புற இரு விளிம்புகள்: புளிப்பு சுவை.
  3. நாவின் முன்புற இரு விளிம்புகள்: உவர்ப்பு சுவை.
  4. நாவின் முன்னுனி: இனிப்பு சுவை.

மேற்கோள்கள் தொகு