மன்னன் மகள் (புதினம்)

சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப்புதினம்

மன்னன் மகள் சாண்டில்யன் எழுதிய வரலாற்றுப் புதினமாகும். இது 72 அத்தியாயங்களைக் கொண்டு ஒரே பாகமாக அமைந்துள்ள நூலாகும். 11ஆம் நூற்றாண்டில், ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பின்னணியில்,கங்கையை நோக்கிய படையெடுப்பு மற்றும் வேங்கி நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை மையமாகக் கொண்ட புதினமாகும்.

மன்னன் மகள்
நூல் பெயர்:மன்னன் மகள்
ஆசிரியர்(கள்):சாண்டில்யன்
வகை:புதினம்
துறை:வரலாறு
இடம்:சென்னை 600 0017
மொழி:தமிழ்
பக்கங்கள்:724
பதிப்பகர்:வானதி
பதிப்பு:32ஆம் பதிப்பு 2012

இந்தப் புதினம், குமுதத்தில் 1958 ஜனவரி மாதம் முதல் 1959 நவம்பர் வரை தொடர்கதையாக வெளியானது.

கதை மாந்தர் தொகு

இராசேந்திர சோழன், கரிகாலன்(கற்பனைப் பாத்திரம்), நிரஞ்சனாதேவி (கற்பனைப் பாத்திரம்), அரையன் ராஜராஜன் (சோழர் படைதளபதி), ராஜ நரேந்திரன் (விமலாதித்தன்-குந்தவை மகன்), விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் ஆகியோர் இக்கதையின் முக்கிய மாந்தராவர்.

உசாத்துணை தொகு

  • 'மன்னன் மகள்', நூல், (32ஆம் பதிப்பு 2012; வானதி பதிப்பகம், 23 தீனதயாளு தெரு, தி,நகர், சென்னை)[1]

மேற்கோள்கள் தொகு

  1. மன்னன் மகள் - எழுத்து நூல் விமர்சனம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னன்_மகள்_(புதினம்)&oldid=2181351" இலிருந்து மீள்விக்கப்பட்டது