மபூட்டோ (ஆங்கில மொழி: Maputo), மொசாம்பிக் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சுதந்திரத்திற்கு முன்னர் இந்நகரம் லோரென்சோ மார்க்ஸ் (ஆங்கில மொழி: Lourenço Marques) என அறியப்பட்டது. இந்நகரத்தில் பரவலாகக் காணப்படும் அக்காசியா மரங்களின் காரணமாக இது அக்காசியாக்களின் நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்து சமுத்திரக் கரையில் ஒரு துறைமுக நகரமாக உள்ள இதன் பொருளாதாரம் துறைமுகத்தையே சார்ந்துள்ளது. 2007 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகரின் மக்கட்டொகை 1,766,184.[1] ஆகும். பருத்தி, சீனி, குரோமைட், சிசல், கொப்பரை போன்றவை பிரதான ஏற்றுமதிப் பொருட்களாகவுள்ள இந்நகரின் பிரதான உற்பத்திப் பொருட்கள் சிமெந்து, மட்பாண்டம், காலணி மற்றும் இறப்பர் என்பனவாகும்.

மபூட்டோ
Lourenço Marques
நகரம்
View of the Maputo skyline
View of the Maputo skyline
நாடு மொசாம்பிக்
அரசு
 • மாநகரசபைத் தலைவர்டேவிட் சிமாங்கோ (David Simango)
பரப்பளவு
 • மொத்தம்346 km2 (134 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்12,44,227
நேர வலயம்ம.ஆ.நே (ஒசநே+2)
Area Code & Prefix(+258) 21-XX-XX-XX
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுMZ

மேற்கோள்கள் தொகு

  1. "Quadros do 3° Censo Geral da População e Habitação 2007". Instituto Nacional de Estatística. Archived from the original on 2012-02-20. பார்க்கப்பட்ட நாள் 2010-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மபூட்டோ&oldid=3566493" இலிருந்து மீள்விக்கப்பட்டது