மம் சிகரம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அமைந்துள்ள மலைச்சிகரம்

மம் சிகரம் (Mumm Peak) ஆல்பர்ட்டா / பிரிட்டிசு கொலம்பியா எல்லையில், மவுண்ட் ராப்சன் மாகாண பூங்காவின் வடக்கு முனையில் பெர்க் ஏரிக்கு வடக்கே அமைந்துள்ளது. சிகரம் ஜாஸ்பர் தேசிய பூங்கா மற்றும் மவுண்ட் ராப்சன் மாகாண பூங்கா ஆகியவற்றால் பகிரப்பட்ட பொதுவான எல்லையில் உள்ளது. 1910 ஆம் ஆண்டில் ஆங்கில வெளியீட்டாளரும் மலையேறுபவருமான அர்னால்ட் எல். மம்ம் (1859-1927) ஜே. நார்மன் கோலி என்பவருடன் இணைந்து இந்த சிகரத்தின் மேல் முதல் முதலில் ஏறினார். இவரது பெயரால் இச்சிகரம் மம் சிகரம் என அழைக்கப்படுகிறது.[1] இந்த மலையானது பூமியின் வரலாற்றின் ஆரம்பப் பகுதி முதல் சுராசிக் காலம் வரையிலான காலகட்டங்களில் அமைக்கப்பட்ட படிவுப் பாறைகளால் ஆனது.[2]

மம் சிகரம்
தெற்குப் பகுதி
உயர்ந்த இடம்
உயரம்2,962 m (9,718 அடி)[1]
இடவியல் புடைப்பு414 m (1,358 அடி)
பட்டியல்கள்
  • ஆல்பர்ட்டா மலைகள்
  • பிரித்தானிய கொலம்பியா மலைகள்
ஆள்கூறு53°11′28″N 119°08′52″W / 53.19111°N 119.14778°W / 53.19111; -119.14778
புவியியல்
மம் சிகரம் is located in Alberta
மம் சிகரம்
மம் சிகரம்
பிரிட்டிசு கொலம்பியாவில் மம் சிகரத்தின் அமைவிடம்
மம் சிகரம் is located in British Columbia
மம் சிகரம்
மம் சிகரம்
மம் சிகரம் (British Columbia)
நாடுகனடா
Provincesஆல்பர்ட்டா and பிரிட்டிசு கொலம்பியா
மாவட்டம்காரிபோ லேண்ட்
மூலத் தொடர்பார்க் மலைகள், கனடிய பாறைகள்
ஏறுதல்
முதல் மலையேற்றம்1910 ஜே. நார்மன் கோலி, ஏ. எல். மம், மோரிட்சு இன்டெர்பியின்
அன்னே-ஆலிஸ் மலை (இடது), மம் சிகரம் (வலது)

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Mumm Peak". PeakFinder.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-12.
  2. Gadd, Ben (2008), Geology of the Rocky Mountains and Columbias
"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்_சிகரம்&oldid=3925512" இலிருந்து மீள்விக்கப்பட்டது