மரபணு தொடரிகள்

மரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவை ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலைக்கருவற்ற உயிர்த் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை (Pribnow box) என அழைக்கப்படும்.

தொடரியில் தொடரூக்கிகள் (promoter binding factors) மற்றும் செயலூக்கிகள் (transcription factors) பிணைந்து ஆர்.என்.ஏ நகலாக்கத்தை தூண்டுவதை விளக்கும் படம்.

நிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும் அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏ என்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள் (Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள் (Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.

பயன்கள் தொகு

  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு மரபணுவை மிகையாகவோ அல்லது குறைவாகவோ வெளிபடுத்த
  • புரத மிகைபடுத்தலில்
  • குறிபிட்ட உறுப்புகளில் மரபணுவை வெளிபடுத்த (brain, heart or plant fruit)

காணும் முறைகள் தொகு

முதலில் தொடரியைக் காண விரும்பும் டி.என்.ஏ வரிசைகளை தேர்ந்தெடுத்து, இணையங்களில் காணப்படும் மென்பொருள்கள் மூலமாக தொடரிக்கான டாட்டா பேழைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய வேண்டும். பின் டி.என்.ஏ வரிசைகளை, ஒரு கணிக்கும் மரபணு வில் பிணைந்து, அவைகள் உண்மையில் தொடரிகளா? என்பதை அறியலாம். மேலும் தொடரிகளின் தொடக்க புள்ளியை அறிய 5' முனை நகர்த்தல் (5' prime Race) என்னும் நுட்பத்தை பாவித்து காணலாம்.

ஒரு தொடரியின் டி.என்.ஏ வரிசையில் பல பிறழ்வுகள் மற்றும் நீக்குதல் ( mutation and deletion) ஏற்படுத்தி, டி.என்.ஏ வரிசையில் எப்பகுதி இன்றியமையாதவையாக உள்ளன என்பதை அறியலாம்.

வகைகள் தொகு

வீரிய தொடரிகள் (constitutive promoter) தொகு

இவைகள் ஒரு மரபணுவை மிகையாக வெளிபடுத்த பயன்படும். பொதுவாக தீ நுண்மங்களில் தொடரிகள் வீரியமாக செயல்படுவையாக இருக்கும். எ.கா. பயிர்களில் பூ மொசைக் தொடரி (Cauliflower mosaic virus Promoter and Cotton leaf curl virus complementary sense promoter).

விலங்குகளில் சைடோமகலோ நுண்ம தொடரி (Cytomagalo virus Promoter).

இவைகள் ஒரு உயிரணுவின் சுழற்சியில் நான்கு நிலைகளிலும் (Gap0, Synthesis phase, Gap1 and Mitosis), செயல் புரிபவையாக உள்ளன.

வீரியமற்ற தொடரிகள் தொகு

சில மரபணுவின் அல்லது குறு ஆர்.எ.ஏ வின் தொடரிகள் மிக குறைவான வெளிபடுதலை கொண்டவையாக இருக்கும்.

வேதி தூண்டிய தொடரிகள் (chemical inducible promoter) தொகு

இவ்வகையான தொடரிகள் ஒரு குறிபிட்ட வேதிப்பொருள் வெளிப்படும் போது, மரபணுவை வெளிபடுத்த வல்லன.

நுண்மம் தூண்டிய தொடரிகள் (Virus induced promoter) தொகு

இவைகள் ஒரு குறிபிட்ட நுண்மம் உயிரினத்தில் சென்றவுடன், நுண்மத்தின் மரபணு தூண்டுதலால் தொடரியெய் ஊக்குவிக்கும். எ.கா. செமினி நுண்மத்தின் சி 2 மரபணு.

பழ தொடரிகள் (Fruit specific promoter) தொகு

இவைகள் பழங்களில் மட்டும் வெளிப்படும். எ.கா. தக்காளியின் பாலிகலக்டோயுறேனசு (polygalactouranase) மரபணுவின் தொடரி.

இவைகள் போல இதய (Alpha myosin promoter) மற்றும் மூளை தொடரிகள் (Heart and brain specific promoter) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கலைச்சொற்கள் தொகு

பிரிப்நொவ் பேழை - Pribnow box

மரபணு தொடரிகள்- gene promoter

டாட்டா பேழை - TATA box

தொடரூக்கிகள் - Promoter binding binding factors

செயலூக்கிகள் - transcription activation factors

தொடரி தொடக்க புள்ளி- transcription start site

மாற்றிகள் -Enhancer

5' முனை நகர்த்தல் - 5' prime Race

பிறழ்வுகள் - mutation

நீக்குதல்- deletion

பூ மொசைக் தொடரி - Cauliflower mosaic virus Promoter

வீரிய தொடரிகள் -constitutive promoter

வேதி தூண்டிய தொடரிகள்- chemical inducible promoter

நுண்மம் தூண்டிய தொடரிகள் -Virus induced promoter

பழ தொடரிகள் -Fruit specific promoter

மேற்கோள்கள் தொகு

  • Gopal et al (2007) Differential roles of C4 and βC1 in mediating suppression of post-transcriptional gene silencing: Evidence for transactivation by the C2 of Bhendi yellow vein mosaic virus, a monopartite begomovirus. Virus Research,Volume 123, Issue 1, January 2007, Pages 9–18 .
  • Xie, Y. Liu, M. Meng, L. Chen and Z. Zhu, Isolation and identification of a super strong plant promoter from Cotton leaf curl Multan virus, Plant Mol. Biol. 53 (2003), pp. 1–14
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபணு_தொடரிகள்&oldid=3739256" இலிருந்து மீள்விக்கப்பட்டது