வகைப்பாடு தொகு

தாவரவியல் பெயர் : அல்சோபைலா எக்செல்லா (Alsophila excelsa)

குடும்பம் : டிக்சோனியேசியீ (Dicksoniaceae)

 
மரப்பெரணி

செடியின் அமைவு தொகு

மலர் எனும் உறுப்புத் தோன்றாத பூவாத்தாவரம் ஆகும். பெரணிகளில் 280 சாதிகளும், 10,000 மேற்பட்ட இனங்களும் உண்டு. பெரும்பாலும் சிறு செடிகளே. இவைகளில் சிலவே மரமாக வளர்கின்றன. பெரணிகளிலே முதன் முதலில் வேர், தண்டு, இலை என்கிற உண்மையான வேறுபாடுகள் காணப்படுகின்றது. இவைகளின் வேர்கள் சாதாரண தாவரங்களின் வேரைப்போல இல்லாமல் ஒட்டுவேர்கள் கொண்டுள்ளது.

மரங்களின் அமைவு தொகு

பெரணிகளில் சையாத்தியா, ஆல்சோபைலா ஆகிய சாதிகளில் சில இனங்கள் மட்டுமே மரமாக வளர்கிறது. அல்சோபைலா எக்செல்சா பெரணி 60-80 அடி உயரம் வளரக்கூடியது. பார்ப்பதற்கு மரம் இருக்கும். இலைகள் மிக விளக்கமாவும், மிக அழகாகவும் இருக்கும். ஒவ்வொரு இலையும் 4மீ நீளம் கூட இருக்கும். இலை முழு முதிர்ச்சி பெறுவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் கூட ஆகும். பெரணி இலைகளின் தளிர்கள் வில்போன்ற சுருள் வடிவில் மடிக்கப்பட்டிருக்கும். இலை வளர வளர சுருள் மெல்ல மெல்ல விரிந்து கொண்டே போகும். இலைகளின் அடியில் ஸ்போர்கள் எனும் விதைத்துகள் உண்டாகின்றன. இம்மரம் ஆஸ்திரேலியாவில் வளர்கின்றன. அல்சோபைலா என்பது கிரேக்க பெயர் ஆகும்.

மேற்கோள் தொகு

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரப்பெரணி&oldid=3711451" இலிருந்து மீள்விக்கப்பட்டது