மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்
மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 24 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் மலேசிய அரசாங்க உயர்ப் பதவிகளை வகித்தவர்கள்:
- ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் 5 அமைச்சர்கள்
- பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராக பேராசிரியர் ராமசாமி
- பேராக் மாநிலத்தின் முதல் தமிழர் சபாநாயகர் வி. சிவகுமார்[1][2]
- பேராக் மாநிலத்தின் இரண்டாவது தமிழர் சபாநாயகர் டத்தோ ஆர்.கணேசன்
பெரும்பாலான இந்திய வேட்பாளர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் போட்டியிட்டனர். மலேசியாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு மலாயர், சீனர், இந்தியர்(தமிழர்) ஆகிய மூன்று இனத்தவர்களின் வாக்குகள் அவசியம் தேவை.
இந்திய வேட்பாளர்கள் தொகு
மலேசியச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் பலவற்றின் வெற்றித் தோல்விகளை மலேசிய இந்திய வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 13 இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய விவரங்கள்.
கெடா தொகு
- கெடா - மணிக்குமார் சுப்பிரமணியம் - புக்கிட் செலாம்பாவ் - கெஅடிலான் மக்கள் நீதிக் கட்சி
பினாங்கு தொகு
- பினாங்கு - தனசேகரன் அத்தரபதி - பாகான் டாலாம் - ஜனநாயக செயல் கட்சி
- பினாங்கு - பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி - பிறை - ஜனநாயக செயல் கட்சி (மாநிலத் துணை முதல்வர்)
- பினாங்கு - நேதாஜி ராயர் - ஸ்ரீ டெலிமா - ஜனநாயக செயல் கட்சி
- பினாங்கு - எஸ்.ரவீந்திரன் - பத்து உபான் - கெஅடிலான் மக்கள் நீதிக் கட்சி (மலேசியா)[3]
பேராக் தொகு
- பேராக் - சிவசுப்பிரமணியம் - புந்தோங் - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - வி. சிவகுமார் - துரோனோ - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - கேஷ்விந்தர் சிங் - மாலிம் நாவார் - ஜனநாயக செயல் கட்சி (2010 ஜூன் 15 முதல் சுயேட்சை)
- பேராக் - கேசவன் சுப்பிரமணியம் - ஊத்தான் மெலிந்தாங் - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி
- பேராக் - சிவனேசன் அச்சலிங்கம் - சுங்கை - ஜனநாயக செயல் கட்சி
பகாங் தொகு
- பகாங் - தேவீந்திரன் மூர்த்தி - சாபாய் - பாரிசான் நேசனல் ( மாநில அமைச்சர்)
சிலாங்கூர் தொகு
நெகிரி செம்பிலான் தொகு
- நெகிரி செம்பிலான் - வி.எஸ்.மோகன் - ஜெராம் பாடாங் - பாரிசான் நேஷனல் (அமைச்சர்)
- நெகிரி செம்பிலான் - எம்.கே.ஆறுமுகம் - ரஹாங் - ஜனநாயக செயல் கட்சி
- நெகிரி செம்பிலான் - பி.குணசேகரன் - செனாவாங் - ஜனநாயக செயல் கட்சி
- நெகிரி செம்பிலான் - ரவி முனுசாமி - போர்டிக்சன் - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி
- நெகிரி செம்பிலான் - வீரப்பன் சுப்பிரமணியம் - ரெப்பா - ஜனநாயக செயல் கட்சி
மலாக்கா தொகு
- மலாக்கா - டத்தோ ஆர். பெருமாள் - அசகான் - பாரிசான் நேசனல் (மாநிலத் தகவல், போக்குவரத்துத் துறை அமைச்சர்)
ஜொகூர் தொகு
- ஜொகூர் - டத்தோ அசோகன் முனியாண்டி - காம்பிர் - பாரிசான் நேசனல் (மாநில அமைச்சர்)
- ஜொகூர் - வித்தியானந்தன் ராமநாதன் - காஹாங் - பாரிசான் நேசனல்
- ஜொகூர் - முருகேஸ்வரி தனராஜன் - தெங்கோரா - பாரிசான் நேசனல்
- ஜொகூர் - முனுசாமி மாரிமுத்து - பெர்மாஸ் - பாரிசான் நேசனல்
மேற்கோள்கள் தொகு
- ↑ "ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை". பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
- ↑ "அமைச்சர் பொறுப்பு சவாலானது - மனிதவள அமைச்சர் சிவகுமார்". பார்க்கப்பட்ட நாள் 23 December 2022.
- ↑ The Birth of Parti Keadilan Nasional: As Good As It Gets.