மஹாபுருஷ் ("The Holy Man", 1965) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான சத்யஜித் ராய் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.

மஹாபுருஷ்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், கதை பார்சுரம்
நடிப்புரவி கோஷ்
வெளியீடு1965
மொழிவங்காள மொழி

கதைச் சுருக்கம் தொகு

வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா, தான் இறப்பற்றவர் எனக் கூறிக்கொள்பவர். இவர் கடந்தகாலத்தில், காலம் பற்றி பிளேட்டோவுடன் விவாதம் செய்தது பற்றியும், ஐன்சுட்டீனுக்கு E=mc2 சமன்பாட்டைச் சொல்லிக்கொடுத்தது பற்றியும், யேசு, புத்தர் போன்றோருடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தது பற்றியும் கதைகளைக் கூறி வந்தார். பிரிஞ்சி பாபாவுக்கு ஏராளமான பணக்காரச் சீடர்கள் இருந்தனர்.

குருபாதா, பிரிஞ்சி பாபாவினால் ஈர்க்கப்பட்டு அவரது சீடராக முடிவெடுக்கிறார். அதேவேளை, மகள் புச்கி, அவளது காதலன் சத்தியாவின் சில நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்து, அவனுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தான் பாபாவின் சீடராகப்ப்போவதாக மிரட்டுகிறாள். சத்தியா தனது நண்பனான நிப்பரனிடம் உதவி கோருகிறான். பிரிஞ்சி பாபா ஒரு ஏமாற்றுக்காரன் என்பதை விரைவிலேயே புரிந்துகொள்ளும் நிப்பரன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாபாவின் ஒண்மை உருவத்தை வெளிப்படுத்துகிறான். பாபாவின் சீடர்கள் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்கின்றனர்.

குருபாதாவாக பிரசாத் முகர்சியும், புச்கியாக கீதாலி ராயும், பிரிஞ்சியாக குருப்பிரகாசு கோசும் வேடமேற்று நடித்துள்ளனர்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹாபுருஷ்&oldid=3224263" இலிருந்து மீள்விக்கப்பட்டது