மாகூர், அசாம்

மாகூர் (Mahur) இந்தியாவின் அசாம் மாநிலம், திமா அசாவ் மாவட்டத்தில் உள்ள நகர மையப் பகுதியாகும்.

மாகூர்
Mahur

মাহুৰ
நகரம்
நாடு India
மாநிலம்அசாம்
மாவட்டம்திமாவ் அசாவ்
ஏற்றம்727 m (2,385 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமி போடோ
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->781372
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS

புவியியல் தொகு

25.17°வடக்கு 93.12°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் [1] மாகூர் நகரம் கடல் மட்டத்திலிருந்து 727 மீட்டர் அல்லது 2385 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [2] மாகூர் நகரத்தின் மக்கள்தொகை 5485 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். மாகூர் நகரின் எழுத்தறிவு சதவீதம் 76% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 80% நபர்கள் ஆண்கள் மற்றும் 71% நபர்கள் பெண்களாவர். மாகூர் நகரின் மக்கள் தொகையில் 13% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும்.

போக்குவரத்து தொகு

நேரடியான விமானப் போக்குவரத்து வசதி இல்லையென்றாலும், குவகாத்தி அல்லது திமாப்பூர் அல்லது சில்ச்சார் வரை விமானத்தில் சென்று அங்கிருந்து இரயிலில் மாகூர் செல்லலாம். லும்திங் பதார்ப்பூர் இரயில்வே பிரிவு மாகூரில் இருந்து குவகாத்தியையும் சில்ச்சாரையும் இணைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Mahur
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகூர்,_அசாம்&oldid=2181228" இலிருந்து மீள்விக்கப்பட்டது