மாகோமா லேகலகலா

தென்னாப்பிரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

மாகோமா லேகலகலா (MakomaLekalakala) ஒரு தென்னாப்பிரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். எர்த் லைஃப் ஆப்பிரிக்கா என்ற சுற்றுச்சூழல் மற்றும் அணு ஆற்றல் எதிர்ப்பு நிறுவனத்திற்கான ஜோகன்னஸ்பர்க் கிளையின் இயக்குநராக உள்ளார்.[1]

மாகோமா லேகலகலா
MakomaLekalakala
தேசியம்தென் ஆப்பிரிக்கா
பணிஇயக்குநர், எர்த் லைஃப் ஆப்பிரிக்கா- ஜோகன்னஸ்பர்க்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

இலிசு மெக்டெய்டுடன் சேர்ந்து, 2017 ஆம் ஆண்டில் உருசிய தென்னாப்பிரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறுத்த நீதிமன்றங்களைப் பயன்படுத்தியதற்காக ஆப்பிரிக்க பிராந்தியத்திற்கான 2018 ஆம் ஆண்டுக்கான கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் மெக்டெய்ட் மற்றும் லேகலகலா ஆகியோர் தென்னாப்பிரிக்காவின் தேசிய அணுசக்தித் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான ஒரு முக்கியமான நீதிமன்ற வழக்கை வென்றதற்காக நிக் ஸ்டீல் நினைவு விருதையும் பெற்றனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. AfikaAdezweni (April 24, 2018). "Our Nuclear Deal Heroes Have Won a Huge International Prize". The Marie Claire Newsletter. Archived from the original on April 3, 2019. பார்க்கப்பட்ட நாள் April 24, 2018.
  2. NosmotGbadamosi (April 24, 2018). "Goldman Prize: Two South African Activists Win For Halting Russian Nuclear Deal". CNN. Archived from the original on July 29, 2018. பார்க்கப்பட்ட நாள் April 24, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகோமா_லேகலகலா&oldid=3146108" இலிருந்து மீள்விக்கப்பட்டது