மாங்கனீசு(II,III) ஆக்சைடு

மாங்கனீசு(II,III) ஆக்சைடு (Manganese(II,III) oxide) என்பது Mn3O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு +2 மற்றும் +3 என்ற இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுவதால் இதனுடைய வாய்ப்பாடு சில சமயங்களில் MnO.Mn2O3. Mn3O4 என்று எழுதப்படுகிறது. இயற்கையில் இது ஆசுமானைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது.

மாங்கனீசு(II,III) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) டைமாங்கனீசு(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
மாங்கனீசு நான்காக்சைடு; மாங்கனீசு ஆக்சைடு, மாங்கனோமாங்கனிக் ஆக்சைடு, மும்மாங்கனீசு நான்காக்சைடு,[1]
இனங்காட்டிகள்
1317-35-7 Y
பப்கெம் 14825
வே.ந.வி.ப எண் OP0895000
பண்புகள்
Mn3O4

MnO.Mn2O3

வாய்ப்பாட்டு எடை 228.812 கி/மோல்
தோற்றம் பழுப்பு கலந்த கருப்பு துகள்[1]
அடர்த்தி 4.86 கி/செ.மீ3
உருகுநிலை 1,567 °C (2,853 °F; 1,840 K)
கொதிநிலை 2,847 °C (5,157 °F; 3,120 K)
கரையாது
கரைதிறன் HCl இல் கரையும்
தீங்குகள்
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
C 5 மி.கி/மீ3[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
உருவாக்கப்படவில்லை[1]
உடனடி அபாயம்
N.D.[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1387 கியூ·மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
149 யூ·மோல்−1·K−1[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

எந்தவொரு மாங்கனீசு ஆக்சைடையும் 1000°செ[3] வெப்பநிலைக்குச் மேல் காற்றில் சூடுபடுத்தும்போது Mn3O4 உருவாகிறது. MnII சேர்மத்தை ஆக்சிசனேற்றம் செய்வது அல்லது MnVI சேர்மத்தை ஆக்சிசன் ஒடுக்கம் செய்வது உள்ளிட்ட செயல்முறைகளில் மீநுண்துகள் படிக Mn3O4 சேர்மத்தை உருவாக்க போதுமான ஆராய்ச்சிகள் மையப்படுத்தப்பட்டு வருகின்றன[4][5][6]

வினைகள் தொகு

மீத்தேன் மற்றும் கார்பன் ஓராக்சைடை[7][8] ஆக்சிசனேற்றம் செய்தல் NO சேர்மத்தை சிதைவடையச் செய்தல்[9], நைட்ரோபென்சீ னை [10] ஒடுக்கும் செய்தல் மற்றும் வினையூக்கி முன்னிலையில் எரிதல் போன்ற பல்வேறு வகையான வினைகளில் Mn3O4 வினையூக்கியாகச் செயல்படுகிறது[11].

அமைப்பு தொகு

Mn3O4 சிபினல் படிக அமைப்பில் காணப்படுகிறது. ஆக்சைடு அயனிகள் கனசதுர நெருக்கப் பொதிவு கட்டமைப்பும் MnII நான்முக தளங்களிலும் MnIII எண்முகத் தளங்களிலும்[3] ஆக்கிரமித்துள்ளன. சான் தெள்ளர் விளைவு[3] காரணமாக கட்டமைப்பு உருச்சிதைந்து காணப்படுகிறது. அறை வெப்பநிலையில் Mn3O4 இணைகாந்தப் பண்பும் 41-43 கெல்வின் வெப்பநிலைக்கு கீழ் அயக்காந்தப் பண்பும்[12] பெற்றுள்ளது. மீநுண்துகள் படிகங்களில் இவ்வெப்பநிலை அளவு 39 கெல்வினுக்கு குறைவாகின்றது என அறியப்படுகின்றது[13].

பயன்கள் தொகு

மாங்கனீசு துத்தநாக பெர்ரைட்டு[14] மற்றும் இலித்தியம் மின்கலன்களில் பயன்படும் இலித்தியம் மாங்கனீசு ஆக்சைடு முதலிய பொருட்கள் தயாரிப்பில் தொடக்கப் பொருளாகப் பயன்படுகிறது[15]

எண்ணெய் மற்றும் வாயுக் கிணறுகளில் எடையிடும் முகவராக மாங்கனீசு நான்காக்சைடு பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0381". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. https://archive.org/details/chemicalprincipl0000zumd_u9g0. 
  3. 3.0 3.1 3.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  4. Hausmannite Mn3O4 nanorods: synthesis, characterization and magnetic properties Jin Du et al. Nanotechnology, (2006),17 4923-4928, எஆசு:10.1088/0957-4484/17/19/024 10.1088/0957-4484/17/19/024
  5. One-step synthesis of Mn3O4 nanoparticles: Structural and magnetic study Vázquez-Olmos A., Redón R, Rodríguez-Gattorno G., Mata-Zamora M.E., Morales-Leal F, Fernández-Osorio A.L, Saniger J.M. Journal of Colloid and Interface Science, 291, 1, (2005), 175-180 எஆசு:10.1016/j.jcis.2005.05.005
  6. Use of Carbonaceous Polysaccharide Microspheres as Templates for Fabricating Metal Oxide Hollow Spheres Xiaoming Sun, Junfeng Liu, Yadong Li, Chemistry - A European Journal,(2005), 12, 7, 2039 – 2047, எஆசு:10.1002/chem.200500660
  7. The reduction and oxidation behaviour of manganese oxides Stobhe E.R, de Boer A.D., Geus J.W., Catalysis Today. (1999), 47, 161–167. எஆசு:10.1016/S0920-5861(98)00296-X
  8. An in situ XRD investigation of singly and doubly promoted manganese oxide methane coupling catalysts.Moggridge G.D, Rayment T, Lambert R.M. Journal of Catalysis, (1992), 134, 242–252, எஆசு:10.1016/0021-9517(92)90225-7
  9. NO Decomposition over Mn2O3 and Mn3O4. Yamashita T, Vannice A., Journal of Catalysis (1996),163, 158–168, எஆசு:10.1006/jcat.1996.0315
  10. Selective reduction of nitrobenzene to nitrosobenzene over different kinds of trimanganese tetroxide catalysts.Wang W.M., Yang Y.N., Zhang J.Y., Applied Catalysis A. (1995), 133, 1, 81–93 எஆசு:10.1016/0926-860X(95)00186-7
  11. Catalytic combustion of C3 hydrocarbons and oxygenates over Mn3O4. Baldi M, Finocchio E, Milella F, Busca G., Applied Catalysis B. (1998), 16, 1, 43–51, எஆசு:10.1016/S0926-3373(97)00061-1
  12. Magnetic Structure of Mn3O4 by Neutron Diffraction Boucher B., Buhl R., Perrin M., J. Appl. Phys. 42, 1615 (1971); எஆசு:10.1063/1.1660364
  13. Synthesis of superparamagnetic Mn3O4 nanocrystallites by ultrasonic irradiation I.K. Gopalakrishnan, N. Bagkar, R. Ganguly and S.K. Kulshreshtha Journal of Crystal Growth 280, 3-4, (2005), 436-441, எஆசு:10.1016/j.jcrysgro.2005.03.060
  14. Method of making manganese-zinc ferrite U.S Patent number: 4093688 (1978) Arthur Withop, Roger Emil Travagli
  15. Process for preparing lithium manganese oxides,U.S Patent number: 6706443,(2004), Horst Krampitz, Gerhard Wohner
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு(II,III)_ஆக்சைடு&oldid=3849814" இலிருந்து மீள்விக்கப்பட்டது