மாசிடோனியா சதுக்கம்

பல்கேரிய நாட்டின் தலைநகரம் சோஃபியாவில் உள்ள பகுதி

மாசிடோனியா சதுக்கம் (Macedonia Square, Sofia) பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவின் மையத்தில் உள்ள ஒரு முக்கிய நகர சதுக்கம் மற்றும் சந்திப்பு ஆகும்.[1][2] 1989 ஆம் ஆண்டு ஏற்பட்ட சனநாயக மாற்றங்களுக்கு முன்பு மாசிடோனியன் இனக்குழுவைச் சேர்ந்த பல்கேரியாவின் அரசியல் தலைவரும் மெய்யியல் அறிஞருமான திமிடர் பிளாகோவ் நினைவாகப் இப்பெயரிடப்பட்டது.[1][3]

பல்கேரியாவின் தலைநகரம் சோஃபியாவில் அமைவிடம்

சதுக்கத்தை கடக்கும் முக்கிய சாலைகள் மாசிடோனியா சாலை, இரிசுட்டோ போடேவ் சாலை மற்றும் மத்திய விட்டோசா சாலைக்குச் செல்லும் அலபின் தெரு ஆகியவை மாசிடோனியா சதுக்கத்தை கடக்கும் முக்கிய சாலைகளாகும். டிராம் வண்டிப் பாதைகள் பல இச்சதுக்கத்தின் வழியாக செல்கின்றன. வேளாண்மை, உணவு மற்றும் வனத்துறை அமைச்சகம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு முகமை ஆகியவற்றின் கட்டடங்கள் சதுக்கத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளன.[4][5] மாசிடோனியா சதுக்கம் விரைவான நகர்ப்புற வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். நகரத்தின் மிக உயரமான இரண்டு கட்டடங்கள் இங்கு அமைந்துள்ளன. மற்றொரு கட்டடம் கட்டுமானத்தில் உள்ளது.[6][7]

படக்காட்சியகம் தொகு


மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Stolica.bg" (in பல்கேரியன்).
  2. "Опознай.bg" (in பல்கேரியன்).
  3. "Visit Sofia" (in பல்கேரியன்).
  4. "Контакти | Министерство на земеделието, храните и горите". mzh.government.bg (in பல்கேரியன்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  5. "API :: Contacts". www.api.bg. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
  6. "Confederation of Independent Trade Unions of Bulgaria - Address".
  7. "Bulgaria | TELUS International".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிடோனியா_சதுக்கம்&oldid=3868859" இலிருந்து மீள்விக்கப்பட்டது