மாதா நிகால் கவுர்

மாதா நிகால் கவுர் (Mata Nihal Kaur)(இறப்பு 29 செப்டம்பர் 1644) என்பவர் ஆனந்தி, நிகாலோ மற்றும் பாசுசி என்றும் அழைக்கப்படும் மாதா நாட்டி என்று பிரபலமாக அறியப்பட்டவர், பாபா குர்தித்தாவின் மனைவி ஆவார்.[1] இவரது தந்தை பாய் ராமா தாயார் சுக்தேவி ஆவர். இவர்கள் இருவரும் இன்றைய குர்தாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள படலா பகுதியைச் சேர்ந்த கத்ரி சீக்கியர்கள் ஆவர். 1624ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி பாபா குர்தித்தாவுடன் மாதா நிகால் கவுருக்குத் திருமணம் நடைபெற்றது. நிகால் கவுர் ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்தின் மருமகள் ஆவார். இவர், திர் மால் (பிறப்பு 11 சனவரி 1627) மற்றும் ஏழாவது சீக்கிய குருவான குரு ஹர் ராய் (பிறப்பு 18 சனவரி 1630) ஆகிய இரு மகன்களைப் பெற்றெடுத்தார்.

மாதா

நிகால் கவுர்
Nihal Kaur
சுய தரவுகள்
பிறப்பு
ஆனந்தி
இறப்பு29 செப்டம்பர் 1644
கிராத்பூர், பஞ்சாப்
சமயம்சீக்கியம்
மனைவிபாபா குர்திட்டா
குழந்தைகள்திர் மால்
குரு அர் ராய்
பெற்றோர்கள்
  • பாய் ராமா (தந்தை)
  • சுக்தேவி (தாய்)

1644-ல் குரு அர்கோவிந்த் இறந்த போது, மாதா நானகி பகாலாவில் இடம்பெயர்ந்தது, அர் ராய் மற்றும் குரு அர் கிருசன் ஆகியோரின் குருப்பதவி காலங்களில் நிகால் கவுர் குருவின் குடும்பத் தலைவராக இருந்தார்.[2]

ஏழாவது குருவின் வளர்ப்பிற்கு இவர் பொறுப்பேற்றார். சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக்கின் இல்லத்தின் ஆன்மீக விழுமியங்களை உட்புகுத்தினார். குருக்களின் தாய்மார்கள் அனைவருக்கும் இருந்தது போல் கருணை, அன்பு, இரக்கம், வீரம், பணிவு போன்றவற்றின் மதிப்பை இளம் குருவுக்குக் கற்பித்தார்.

மாதா நிகால் கவுர் 1644 செப்டம்பர் 29 அன்று கிராத்பூரில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. The encyclopaedia of Sikhism. Vol. 1. Harbans Singh. Patiala: Punjabi University. 1992–1998. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2883-8. இணையக் கணினி நூலக மைய எண் 29703420.{{cite book}}: CS1 maint: others (link)
  2. The encyclopaedia of Sikhism. Vol. 3. Harbans Singh. Patiala: Punjabi University. 1992–1998. p. 210. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-2883-8. இணையக் கணினி நூலக மைய எண் 29703420.{{cite book}}: CS1 maint: others (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதா_நிகால்_கவுர்&oldid=3668771" இலிருந்து மீள்விக்கப்பட்டது