மாதிம் பள்ளத்தாக்கு

மாதிம் பள்ளத்தாக்கு (Ma'adim Vallis) செவ்வாயில் உள்ள பெரிய வெளிச்செல்லும் வாய்க்கால்களில் ஒன்றாகும். இது 21°48′S 182°42′E / 21.8°S 182.7°E / -21.8; 182.7 என்ற ஆள்கூற்றில் அமைந்துள்ளது. புவியின் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கை விட இது பெரியது. மாதிம் பள்ளத்தாக்கு 20 கி.மீ அகலமும், 2 கி.மீ ஆழமும், சுமார் 700 கி.மீ நீளம் உடையது. இது செவ்வாயில் முற்காலத்தில் நிறைய ஏரிகள் இருந்ததாக கருதப்படும் தெற்கு பள்ளப்பகுதி நிலத்திற்கும் கூசெவ் குழியின் வடக்குப் பகுதிக்கும் இடையில் இருப்பதாக கருதப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும் பொழுது கூசெவ் குழியில் தண்ணீர் இருந்திருக்கலாம் என கருதப்பட்டது. எனவே இசுபிரிட் தளவுளவியை தண்ணீர் இருந்ததற்கான சாத்தியத்தை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் அது எரிமலைப் பாறைகளை மட்டும் தான் கூசெவ் குழியில் கண்டறிந்தது. எனவே முதலில் ஏரி இருந்த பாறைப் படிமங்களை, பிறகு ஏற்பட்ட எரிமலை உமிழ்வுகளால் ஏற்பட்ட பாறைகள் மறைத்திருக்கலாம் என இப்பொழுது கருதப்படுகிறது.

செவ்வாயின் மாதிம் பள்ளத்தாக்கு - கூசெவ் குழியுடன்

மாதிம் பள்ளத்தாக்கின் கரைப்பகுதியில் சில சிறிய கால்வாய்கள் தேங்கிய நீர் எற்படுத்தும் அரிப்பால் உருவானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மாதிம் (מאדים) என்பது எபிரேய மொழியில் செவ்வாய்க் கோளைக் குறிக்கும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதிம்_பள்ளத்தாக்கு&oldid=1619361" இலிருந்து மீள்விக்கப்பட்டது