மாமலேசுவர் கோவில்

இந்தியாவின் காசுமீரில் உள்ள இந்து கோயில்

மாமலேசுவர் கோயில் (Mamaleshwar Temple) இந்தியாவின் காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள பகல்காம் நகரில் அமைந்துள்ள ஓர் இந்து கோயிலாகும். மாமல் கோயில் என்ற பெயராலும் இக் கோயில் அழைக்கப்படுகிறது. இலித்தர் ஆற்றின் கரையில் 2,200 மீட்டர்கள் (7,200 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. . புராணக்கதையின் படி, பார்வதியின் அனுமதியின்றி யாரையும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், விநாயகரை வாசல் காவலராக வைத்த கோயில் இதுவாகும். சிவன் விநாயகரின் தலையை வெட்டி யானைத்தலை கொடுத்த தலமும் இதுவென்று கூறப்படுகிறது. மம் மால் என்றால் போகாதே என்பது பொருளாகும். எனவே இது மம்மால் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

மாமலேசுவர் கோவில்
Mamaleshwar Temple
கோடையில் மாமலேசுவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:சம்மு காசுமீர்
மாவட்டம்:அனந்தநாக்கு மாவட்டம்
அமைவு:பகல்கம்
ஆள்கூறுகள்:34°00′35″N 75°18′43″E / 34.009771°N 75.311833°E / 34.009771; 75.311833
கோயில் தகவல்கள்

வரலாறு தொகு

இந்த கோயில் கி.பி 400 (1,600 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது மற்றும் இடைக்காலத்தில் புனரமைக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. [1] இராசதரங்கிணி என்ற கல்கனரின் கவிதை நூலில் மம்மேசுவரர் என்றழைக்கப்படும் கோயிலைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் உச்சியில் தங்க கலசத்தால் அலங்கரிக்கப்பட்டதை மன்னன் செயசிம்மன் பதிவு செய்துள்ளார். [2] [3]

புராணம் தொகு

பார்வதியின் அனுமதியின்றி யாரையும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், விநாயகரை வாசல் காவலராக வைத்ததாகக் கூறப்படும் புராணக் கோயில் இதுவாகும். சிவன் விநாயகரின் தலையை வெட்டி யானைத் தலையைக் கொடுத்த தலமும் இதுவாகும். மம் மால் என்றால் போகாதே என்று அர்த்தம், எனவே இது ம் மம்மால் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமலேசுவர்_கோவில்&oldid=3785089" இலிருந்து மீள்விக்கப்பட்டது