மார்கஸ் ஸ்டோய்னிஸ்

ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

மார்கஸ் பீட்டர் ஸ்டோய்னிஸ் (பிறப்பு: ஆகஸ்ட் 16, 1989) ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆவார். அவர் ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் . அவர் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் மெல்போர்ன் ஸ்டார் ஆகிய அணிகளுக்குக்காக உள்நாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் விக்டோரியா ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

மார்கஸ் ஸ்டோய்னிஸ்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஸ்டோய்னிஸ் பெர்த்தில் பிறந்தார், மேலும் 17 வயதிற்குட்பட்ட மற்றும் 19 வயதிற்குட்பட்ட மட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்க்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். [1] ஸ்டோனிஸ் 2008 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடினார் . [2] அடுத்த ஆண்டு, அவர் ஹாங்காங் சிக்ஸர்களில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [3]

சர்வதேச போட்டி தொகு

ஸ்டோய்னிஸ் அறிமுக டிவெண்டி 20 சர்வதேசப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 2015 31ல் விளையாடினார். [4] இவர் ஒரு நாள் சர்வதேசபோட்டியில் 11 செப்டம்பர் 2015ல் அதே அணிக்கு எதிராக அறிமுகமானார் வந்து [5] 30 ஜனவரி 2017 அன்று தனது இரண்டாவது ஒருநாள் போட்டியை நியூசிலாந்து எதிராக விளையாடிய ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங்கில் 146* ரன்கள் அடித்தார். [6] ஆஸ்திரேலிய அணி தோல்வியுற்ற போதிலும் , ஸ்டோய்னிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். [7]

குறிப்புகள் தொகு

  1. Miscellaneous Matches played by Marcus Stoinis (36) – CricketArchive. Retrieved 4 December 2012.
  2. Under-19 ODI Matches played by Marcus Stoinis (3) – CricketArchive. Retrieved 4 December 2012.
  3. Jeremy Smith picked for Hong Kong Sixes – Cricket Tasmania. Published 23 October 2009. Retrieved 4 December 2012.
  4. "Australia tour of England and Ireland, Only T20I: England v Australia at Cardiff, Aug 31, 2015". ESPNCricinfo. 31 August 2015. பார்க்கப்பட்ட நாள் 31 August 2015.
  5. "Australia tour of England and Ireland, 4th ODI: England v Australia at Leeds, Sep 11, 2015". ESPNCricinfo. 11 September 2015. பார்க்கப்பட்ட நாள் 11 September 2015.
  6. Sundararaman, Gaurav (30 January 2017). "Why Marcus Stoinis' 146 was a freak innings". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017.
  7. "Stoinis stranded short of incredible heist". ESPNcricinfo. 30 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கஸ்_ஸ்டோய்னிஸ்&oldid=3684481" இலிருந்து மீள்விக்கப்பட்டது