மாவளி திருவிழா

மாவளி திருவிழா[1]என்பது கார்த்திகைதீப நன்னாளில் சொக்கப்பனை ஏற்றல் மற்றும் மாவளி சுற்றல் ஆகிய நிகழ்வுகளை கொண்ட ஒரு தமிழர் கொண்டாட்டமாகும். இது குழந்தைகள் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு பாரம்பரிய விழாவாகும்.பனம்பூ அளகினை எரித்தல் என்ற பாரம்பரிய முறையில் இதற்கான மூலப்பொருள்களை உருவாக்கி மாவளி தயாரிக்கின்றனர்.[2][3]

சொக்கப்பனை ஏற்றல் தொகு

சொக்கப்பனை ஏற்றல் அல்லது சொக்கப்பனை கொளுத்துதல் என்பது பனைமரத்தினை நெடுக நிறுத்தி வைத்து அதனை எரியூட்டி வழிபடும் நிகழ்வாகும்.பனை ஓலைகளை சோளக்காட்டுபொம்மை போன்று குவித்தும் எரியூட்டி வழிபடுவர். பெரும்பாலும் சைவ வழிபாட்டு தளங்களிலும், கிராமப்புறங்களில் குலதெய்வ கோவில்களிலும் இந்நிகழ்வு நடைபெறும்.

வரலாறு தொகு

மாவளி சுற்றல் என்பது தமிழக பழங்குடிகளின் தொன்மையான வழக்கமாகும். இது ஏறக்குறைய 4500 ஆண்டுகள் பழமையான கொண்டாட்டமாகும். வரலாறு அடிப்படையில் நோக்கும்போது இது உழவு சமூதாயத்தின் ஆரம்பநிலையில் தொடர்ந்த கற்கால மக்களின் சடங்காகும். உதாரணமாக தமிழ்நாட்டில் கற்கால பாறை ஓவியங்களில் இது தொடர்பான ஓவியங்கள் காணப்படுகின்றன.மாவளி என்ற தமிழ் சொல்லிற்கு வலிமையான சுழல்காற்று என்றும் ஒளிரும் வானம் என்றும் பொருள் தருகிறது.[4]வளி என்ற சொல் காற்று, வானம் என்ற பொருளை தருகிறது.மாவளி, சூறாவளி போன்ற சொற்கள் அந்த காற்றின் தன்மையை குறிப்பிடுகிறது.[5]எனவே மாவளி என்பது அழகிய வானவேடிக்கை என்று பொருள் கொள்ளலாம்.

பனைமரமானது தமிழர்களின் பண்பாட்டோடு கலந்த ஒன்றாகும். வேளாண் சமூகமாக உருவாகும் முன்னர் தமிழர்கள் பனை காடுகளில் வாழ்ந்தனர்.ஆண் பனை மரத்தின் பூக்காம்புகள் அளகு எனப்படுகிறது. இதனை எரித்து பொடி செய்து உப்பு கலந்து மாவளி பொடி தயாரிக்கின்றனர்.இது பொறியும் தன்மை கொண்டது.

கார்த்தீ தொகு

மாவளி பொறிவானம் ஊர்புரங்களில் "கார்த்தீ" என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கார்காலத்தில் தமிழக பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்ட நெருப்பு கொண்டாட்டம் இதுவாகும்.கார்த்திகை பனிக்காலத்தில் வெளிச்சத்திற்கும், வெப்பத்திற்குமான விளக்கிடும் முறையும், மாவளி பொறிவானமும், சொக்கப்பனை ஏற்றலும் தமிழக பழங்குடிகளின் தொன்மையான வழக்கமாகும். கார், கார்த்திகை என்ற பனிக்கால நெருப்பை குறிக்கும் சொல் கார்த்தீ ஆகும்.

தீவளி தூவல் தொகு

சொக்கப்பனையின் சாம்பல் குழந்தைகள் மற்றும் பேறுகால பெண்கள் திருநீறாக நெற்றியில் பூசுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் நல்லதாகும். வீடுகளில் விளக்கேற்றிவிட்டு இரவு நேரத்தில் விளக்கு ஒளியில் இச்சாம்பலை விளைநிலங்களில் பயிர்களின் மீதும் தூவப்படுகிறது. இதனை தீவளிதூவல் என்று அழைக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. https://tamil.news18.com/news/puducherry/mavali-festival-in-puducherry-on-the-occasion-of-karthik-deepam-tamilian-traditional-festival-851191.html
  2. "இளையோரால் மறக்கத் தொடங்கிய கார்த்திகை மாவலி - வருங்காலத்திலும் தொடர புதுமுயற்சி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  3. ValaiTamil. "காணாமல் போன மாவளி -கார்த்திகை திருவிழா". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  4. https://dsal.uchicago.edu/cgi-bin/app/winslow_query.py?qs=%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF&matchtype=exact&searchhws=yes
  5. சூறாவளிபோற் சுழற்றுஞ் சிறுபுன்றுரும்பு (நன்னெறி. 11)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவளி_திருவிழா&oldid=3876708" இலிருந்து மீள்விக்கப்பட்டது