மிச்செல் பிளாட்டினி

பிரெஞ்சு கால்பந்து வீரர், மேலாளர்

மிசேல் பிரான்சுவா பிளாட்டினி (Michel François Platini, பிறப்பு: சூன் 21, 1955), பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த முன்னாள் காற்பந்து வீரர் மற்றும் மேலாளர் ஆவார். 2007-ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவராக இருக்கிறார். வரலாற்றின் மிகச்சிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் ஃபிஃபா நூற்றாண்டின் சிறந்த வீரர் ஓட்டெடுப்பில் தனிச் சிறப்புச் சான்றாளர் குழுவின் ஓட்டெடுப்பில் ஆறாவது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும், ஃபிஃபா கனவு அணியின் அங்கத்தவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]பாலோன் தி'ஓர் விருதை 1983, 1984 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றார்; அதிகபட்ச பாலோன் தி'ஓர் விருது பெற்ற சாதனையாக யோகன் கிரையொஃப், மார்க்கோ வான் பாஸ்டன் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருடன் மூன்றுமுறை வென்றிருக்கிறார். (2012-ஆம் ஆண்டில் லியோனல் மெஸ்ஸி நான்காவது முறையாக இவ்விருதை வென்று புதிய சாதனை படைத்தார்). 2004-ஆம் ஆண்டில் ஃபிஃபா நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் போது பெலே அவர்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறந்த 125 காற்பந்து வீரர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மிச்செல் பிளாட்டினி

UEFA President Michel Platini in Poland, September 2010
சுய தகவல்கள்
முழுப் பெயர்Michel François Platini
பிறந்த நாள்21 சூன் 1955 (1955-06-21) (அகவை 68)
பிறந்த இடம்Jœuf, பிரான்சு
உயரம்1.78 m (5 அடி 10 அங்) (5 அடி 10 அங்)
ஆடும் நிலை(கள்)Attacking midfielder
இளநிலை வாழ்வழி
1966–1972AS Jœuf
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1972–1979Nancy181(98)
1979–1982Saint-Étienne104(58)
1982–1987யுவென்டசு147(68)
மொத்தம்432(224)
பன்னாட்டு வாழ்வழி
1976–1987பிரான்சு[1]72(41)
1988குவைத்1(0)
மேலாளர் வாழ்வழி
1988–1992பிரான்சு
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

குறிப்புதவிகள் தொகு

  1. "Michel Platini Biography". Soccer-fans-info.com. 3 May 1973. Archived from the original on 3 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "FIFA Player of the Century" (PDF). touri.com. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Pele's list of the greatest". BBC Sport. 4 March 2004. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்செல்_பிளாட்டினி&oldid=3567566" இலிருந்து மீள்விக்கப்பட்டது