மின்வழி கற்றல்

கணிப்பொறியின் உதவியுடன் கல்வியை நடைமுறைப்படுத்துவதே இ கற்றல் அல்லது மின் கற்றல் (E-Learning) எனப்படும். பாடங்களை வடிவமைத்தல், கற்பித்தல், தேவையான பாடங்களை தேர்ந்தெடுத்தல், கற்றலை நிர்வகித்தல் முதலான நடவடிக்கைகளை மின்னனு முறையில் மேற்கொள்வதே இ-கற்றல்/மின் கற்றலின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மின் கற்றல் என்பதனை மின்னணு ஊடகங்களின் உதவி கொண்டு தரப்படும் அல்லது பெறப்படும் கல்வி எனலாம். ஆகவே பாடஙக்ளின் உள்ளடக்கம்யாவும் மின்னணு ஊடகத் தொழில் நுட்பத்தினைக் கொண்டே வழஙகப்படுகின்றன. மின் கற்றல் கல்வியின் மூன்று முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. அவையாவன:

  1. பல்வேறு வடிவங்களில் பாடங்களின் உள்ளடக்கத்தினை எடுத்து வழங்குதல் (Content Delivery in Multiple Formats)
  2. கற்கும் அனுபவத்தை மேலாண்மை செய்தல் Managing the Learning Experience)
  3. கற்பவர்கள், பாடத்திட்ட வடிவமைப்பாளர்கள், மற்றும் நிபுணர்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பினை உருவாக்குதல் (Building a network of Learners, Designer and Scholars)

தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறைகளில்(Information and Communication Technology -ICT) ஏற்பட்டுள்ள வளர்ச்சி மனித வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் எந்த அளவுக்கெனில் "அறிவு சார் பொருளாதாரம்", "அறிவு சார் சமூகம்", மற்றும் "அறிவு சார் கால கட்டம்" என்பன குறித்து நாம் சிந்திக்கவும், பேசவும் செய்யும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.

இ-கற்றலை முக்கியமான மூன்று விதங்களில் வகைப்படுத்தலாம்:

  1. குறுந்தகடுகளைக் கொண்டு கற்றல் (CD /DVD based Education)
  2. வகுப்பறைகளில் கற்றல் (Classroom based Education)
  3. இணைய வழியில் கற்றல் (Web based Education)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்வழி_கற்றல்&oldid=1685306" இலிருந்து மீள்விக்கப்பட்டது