மியன்மார் தமிழர்

தமிழ்நாட்டில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசாலும் தாமாகவும் தொழிலாளர்களாகவும் அரச சேவர்கர்களாகவும் வணிகர்களாகவும் பர்மா(மியான்மார்) கொண்டு செல்லப்பட்டவர்களின், சென்றவர்களின் வம்சாவழியினர் பர்மா தமிழர் அல்லது மியன்மார் தமிழர் ஆவர்.

யாங்கோனில் உள்ள சிறீ காளி கோவில்

தொடக்கத்தில் 500 000 மேற்பட்டவர்களாக இருந்தார்கள். 1960 களில் பர்மாவில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பெரும்பாலான தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.[1] இருப்பினும் இன்றும் பர்மாவில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். தற்போது,பல பத்தாண்டுகளுக்குப் பிறகு "பர்மாவில் சுமார் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற கணிப்புகள் கூறுகின்றன."[2] பர்மா அரசு அவர்களுக்கு தமிழ்க் கல்வியையோ, பண்பாட்டையோ பேண இடமளிக்கவில்லை என்ற படியால் பலர் பர்மா மைய நீரோட்டத்தில் கலந்துவிட்டார்கள். இருப்பினும் குறிப்பிடத்தக்க தொகையினர் தமிழ் அடையாளத்தோடும் இன்றும் பர்மாவில் வசிக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் பராசக்தியில் பர்மா தமிழர் அகதியாக தமிழ்நாடு திரும்புகையில் சந்திக்கும் அவலங்கள் காட்டப்பட்டுள்ளன.

ரங்கூனில்(தற்போதைய யாங்கோன்) இருந்து தனவணிகன் என்ற நாளேடு சில ஆண்டுகள் வெளியானது.

வரலாறு தொகு

  • இடைக்காலம் - சோழர் காலத் தொடர்புகள் (பகார்)
  • 1800 கள் - பிரித்தானியர், செட்டியார் பெருந்தொகை தமிழ்நாட்டுத் தமிழர்களை அழைத்துச் சென்றனர்
  • 1948 - பிரித்தானிய ஆட்சி முடிவு, தமிழர்களின் நிலை சரிவு
  • 1960 - இராணுவ ஆட்சி - பெருந்தொகைத் தமிழர் வெளியேற்றம்
  • 2010 கள் - மக்களாட்சி சீர்திருத்தங்கள், பெளத்த பேரினவாதம்

அமைப்புகள் தொகு

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் தொகு

  • புது ஊர்
  • முதலித் தட்டு
  • கவனந் தட்டு
  • அரிசிக்காடு

இவற்றையும் பாக்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 02 - இரண்டாம் உலகப் போரின் தாக்கம்
  2. தங்க மண்ணில் தங்கிய தமிழர்கள்: பகுதி 01 - தொடர் அறிமுகம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மியன்மார்_தமிழர்&oldid=3443258" இலிருந்து மீள்விக்கப்பட்டது