மீன் சந்தை (fish market) என்பது பல இடங்களில், பல பிரதேசங்களில் பிடிக்கப்படும் மீன்களை, ஒரு குறிப்பிட்ட இடத்தில், விற்கும் வாங்கும் ஒரு குறிப்பிட்ட சந்தை ஆகும். இச்சந்தைகள் மீனவர்களுக்கும், மீன் வியாபாரிகளுக்கும் இடையில் நடைபெறும் மொத்த வியாபாரத்தலமாகவோ, அல்லது தனி நபர்களுக்கு கடல் உணவுகளை விற்பனைசெய்யும் இடமாகவோ அல்லது இரண்டு வகையான வியாபாரங்களும் நடைபெறும் இடமாகவோ இருக்கும். சில்லறை வணிகத்தில் ஈடுபடும் மீன்சந்தைகளில், பிற உணவுகளும் விற்பனைச் செய்யப்படுகின்றன. மீன் சந்தைகள் அளவில் பெருமளவு வேறுபடுகின்றன. சிறிய கடைகள் முதல், வருடத்திற்கு 660,000 டன்கள் மீன் விற்பனைச் செய்யும் டோக்கியோவிலுள்ள பெரிய சந்தை வரை மீன் சந்தை என்றே அழைக்கப்படுகின்றன[1].

மீன் சந்தை

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்_சந்தை&oldid=2849896" இலிருந்து மீள்விக்கப்பட்டது