மீரா முகர்ஜி

இந்தியச் சிற்பி

மீரா முகர்ஜி (Meera Mukherjee 1923-1998) ஓர் இந்தியச் சிற்பி [1] மற்றும் எழுத்தாளர் ஆவார், பண்டைய பெங்காலி சிற்பக் கலைக்கு நவீனத்துவத்தைக் கொண்டுவரும் செயல்களில் ஈடுபட்டார். [2] சத்தீசுகர், பஸ்தர் மாவட்டத்தில் இவர் தகோரா எனும் புதுமையான வெண்கல வார்ப்பு நுட்பங்களைப் (லாஸ்ட் வேக்ஸ் கேஸ்டிங் முறையின் மேம்பாடு) பயன்படுத்தும் முறையினைக் கற்றார். கலைக்கான பங்களிப்பிற்காக 1992 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிக உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது பெற்றார். [3]

மீரா முகர்ஜி
பிறப்பு1923
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இறப்பு1998
தேசியம்இந்திய மக்கள்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பாலிடெக்னிக் (தற்போது டெல்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்)
அறியப்படுவதுசிற்பம்
பெற்றோர்விஜயேந்திரமோகன் முகர்ஜி
பினாபானி தேவி
விருதுகள்பத்மசிறீ
பத்திரிக்கை விருது

அபனிந்திரநாத் விருது

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

மீரா முகர்ஜி, 1923 இல் கொல்கத்தாவில் விஜயேந்திரமோகன் முகர்ஜி மற்றும் பினாபானி தேவி தம்பதியினரின் மகளாகப் பிறந்தார். அபனிந்திரநாத் தாகூர் இந்தியன் சொசைட்டி ஆஃப் ஓரியண்டல் ஆர்ட் மையத்தில் இவர் தனது துவக்க காலப் பயிற்சியினை மேற்கொண்டார். 1941 ஆம் ஆண்டு தனக்கு திருமணம் ஆகும் வரை அங்கேயே தங்கியிருந்தார். [4] இவர் குறுகிய காலத்திலேயே திருமண முறிவு பெற்றார். அதன் பின்னர் கொல்கத்தா அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் (இன்றைய டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது படிப்பினைத் தொடர்ந்தார்.[5] மியூனிக் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள 1953 ஆம் ஆண்டில் இந்தோ-ஜெர்மன் பெல்லோஷிப்பைப் பெற்றார்.[6] இது டோனி ஸ்டாட்லர் மற்றும் ஹென்ரிச் கிர்ச்னரின் கீழ் பணிபுரியும் வாய்ப்புகளை வழங்கியது.

விருதுகள் மற்றும் மரியாதைகள் தொகு

முகர்ஜி 1968 ஆம் ஆண்டில், சிற்ந்த கைவினைஞருக்கான பத்திரிகை விருதை இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார். 1981 ல் அபனிந்திர தாகூர் பரிசையும் மேற்கு வங்க அரசிடமிருந்து பெற்றார். [4] இந்திய அரசிடமிருந்து 1992 இல் பத்மசிறீ விருது பெற்றார்.[3]

சான்றுகள் தொகு

  1. "Blouinartinfo profile". Blouinartinfo. 2015. Archived from the original on 23 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Christie's the Art People profile". Christie's the Art People. 2015. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  3. 3.0 3.1 "பத்ம விருதுகள்" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Padma Awards" defined multiple times with different content
  4. 4.0 4.1 "MEERA MUKHERJEE (1923–1998)". Stree Shakti. 2015. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015. பிழை காட்டு: Invalid <ref> tag; name "MEERA MUKHERJEE (1923–1998)" defined multiple times with different content
  5. "Meera Mukherjee's sculpture at Nandiya Garden". Welcome Zest Lounge. 2015. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Sunderason, Sanjukta. ""Sculpture of Undulating Lives": Meera Mukherjee's Arts of Motion"" (in en). Aziatische Kunst, journal of the Royal Society of Friends of Asian Art ( KVVAK) , the Netherlands. https://www.academia.edu/43355025/_Sculpture_of_Undulating_Lives_Meera_Mukherjees_Arts_of_Motion_. 

 

வெளி இணைப்புகள் தொகு

  • "Sculpture gallery". Web mages. Blouinart Info. 2015. Archived from the original on 23 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 23 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_முகர்ஜி&oldid=3567756" இலிருந்து மீள்விக்கப்பட்டது