மீரா ராய் (Mira Rai (பிறப்பு: 31 டிசம்பர் 1988) நேபாள மலைப்பாதை ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார். இவர் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார். அவர் 2017 ஆம் ஆண்டின் நேசனல் ஜியோகிரபி சாகச வெற்றியாளராக விளங்கினார்.[2] இவர் உலகின் மிகவும் சவாலான மலைப்பாதை ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டவர்.[3][4][5][6][7][8][9][10][11][12][13]

மீரா ராய்
தனிநபர் தகவல்
தேசியம்நேபாளியர்
பிறப்பு31 திசம்பர் 1988 (1988-12-31) (அகவை 35)[1]
விளையாட்டு
நாடு நேபாளம்
விளையாட்டுமலைப்பாதை ஓட்டப் பந்தயம்
கழகம்நேபாள மலைப்பாதை ஓட்டப் பந்தய மன்றம்

இளமை வாழ்க்கை தொகு

இமயமலையில் அமைந்த நேபாள மாநில எண் 1இல் உள்ள போஜ்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான் போஜ்பூர் எனும் ஊரில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மீரா ராய். 12 வயது வரை பள்ளிக்குச் சென்ற மீரா ராய், பின்னர் படிபை நிறுத்தி விட்டு, பெற்றோர்களுக்கு உதவிட, பண்ணைத் தோட்டத்தை கவனிக்கவும், சந்தைக்குச் செல்லவும் அன்றாடம் இமயமலையில் ஏறி-இறங்கத் துவங்கினார்.

மீரா ராய் தனது 14-வது வயதில் பெற்றோரிடம் தெரிவிக்காது, வீட்டை விட்டு வெளியேறி, மாவோ கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பின்ன 18-வது வயதி நிறைந்த பின் நேபாள இராணுவத்தில் ஓரான்டு பணிபுரிந்தார். பின்னர் இராணுவத்திலிருந்து விலகி காட்மாண்டு நகரத்தில் கராத்தே மற்றும் ஓட்டப் பந்தயகளில் பயிற்சி பெற்றார்.[14]

தொழில் தொகு

ஒரு நல்ல ஓட்டப் பந்தய வீராங்கனையாக மீரா ராயின் முதலாவது அல்ட்ரா-மராத்தான் ஓட்டப்பந்தயம் இமயமலையில் 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாதரணமாக பங்கேற்று வென்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் முறையான டிரெயில் ஓட்டத்திற்கான தீவிர பயிற்சிக்குப் பிறகு, மீரா ராய் சர்வதேச அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயப் போட்டிகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு பயணம் செய்யத் தொடங்கினார், அங்கு அவர் விரைவாக பல ஓட்டப் பந்தயங்களில் வென்று சாதனை படைத்தார்.[15]

2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற மலைப்பாதை ஓட்டப்பந்தயப் போட்டியில் ஓடிய போது இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், இவர் தனது கவனத்தை நேபாளம் முழுவதும் ஓடுவதை ஊக்குவிப்பதிலும், கிராமப்புற நேபாளத்தைச் சேர்ந்த மற்ற நம்பிக்கைக்குரிய இளம் பெண் விளையாட்டு வீரர்களை சர்வதேச அரங்கில் பங்கேற்கவும் உதவினார். நேபாள இளைஞர்களிடையே மலைப்பாதை ஓட்டப் பந்தய விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அவர் காட்மாண்டுவில் பல மலைப்பாதை ஓட்டப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். மீரா ராய் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் இடம்பெற்றுள்ளார். இது ஒரு தொலைதூர மற்றும் கிராமப்புற கிராமத்திலிருந்து ஒரு தேசிய ஹீரோ வரை தனது வாழ்க்கையை உள்ளடக்கியது. ஒரு ஆணாதிக்க சமுதாயத்தில், இவர் நாடு முழுவதும் உள்ள பல சிறுமிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்.[16]

2017 ஆம் ஆண்டில், மீரா போட்டியிடும் அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயத்தில் மீண்டும் இணைந்தார். செப்டம்பர் 2017-ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற 120 கிலோ மீட்டர் தொலைவிற்கான பென் நெவிஸ் அல்ட்ரா-மலைப்பாதை ஓட்டப் பந்தயத்தில், 14 மணி நேரம், 24 நிமிடங்களில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

சாதனைகள் தொகு

மீரா ராயின் ஓட்டப் பந்தயச் சாதனைகள் கீழ்கண்டவாறு:[17]

  மலை ஓட்டப்பந்தயத் தொடர்கள் (2 வெற்றி)
ஆண்டு நாள் ஓட்டப்பந்தயம் நிலை குறிப்பு
2017 16.09 பென் நேவிஸ் அல்டிரா ஓட்டப்பந்தயம் முதலிடம் (புதிய சாதனை)
2016 30.04 3 கொடுமுடிகளை கடக்கும் ஓட்டப்பந்தயம் இரண்டாமிடம்
2015 19.09 அல்டிரா பிரிநியூ இரண்டாமிடம்
19.07 தோலமைட்டு மலை ஓட்டப்பந்தயம் 13-ஆம் இடம்
04.07 பார்ரோ மலை ஓட்டப் பந்தயம் முதலிடம்
26.06 மோண்ட் பிளாங்க் ஓட்டப் பந்தயம் 80 கிமீ முதலிடம் (புதிய சாதனை)
12.04 பப்பலோ மலை ஓட்டப்பந்தயம் மூன்றாமிடம் (42 கிமீ 4:52)
21.03 இமயமலை 50 கிமீ ஓட்டப்பந்தயம் முதலிடம்
07.02 சாய் குங் ஆசிய மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
01.02 இமயமலை ஒட்டப்பந்தயம் முதலிடம்
03.01 காட்மாண்டு அல்டிரா வடக்கு ஓட்டப்பந்தயம் முதலிடம்
2014 07.12 இமயமலை 50 கிமீ ஓட்டப்பந்தயம் இரண்டாமிடம்
05.12 இமயமலையில் செங்குத்தாக ஓடும் போட்டி முதலிடம்
28.11 கோத் இரண்டாமிடம்
08.10 மனசுலு மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
26.10 இமயமலை 50 கீமீ ஓட்டப்பந்தயம் முதலிடம் (5:30:32 5th overall)
28.09 தேக்லி எரோய், 83 கிமீ ஓட்டப்ந்தயம் முதலிடம் (9:16)
13.09 செல்லாரோண்டா மலைப்பாதை ஓட்டம், 57 கிமீ (57 km) முதலிடம் (6:36:30)
21.04 முஸ்தாங் மலை ஓட்டப்பந்தயம் முதலிடம்
23.03 வெளி இமயமலை ஓட்டப்பந்தயம், 50 கிமீ முதலிடம்

மேற்கோள்கள் தொகு

  1. "Mira Rai". fidal.it. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
  2. "This Woman is Your Adventurer of the Year—Video Exclusive". National Geographic. Archived from the original on 30 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 30 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Mira Rai | Mira Rai, a short story about a talented runner from Nepal". Miraraifilm.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  4. "Mira Rai". Trail Running Nepal. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  5. "Mira Rai clinches int'l ultra-marathon in France". My Republica. 2015-06-27. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  6. Naresh Newar. "Running all her life | Nepali Times Buzz". Nepali Times. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  7. "Serious Sisu: Mira Rai — SisuGirls". Sisugirls.org. 2014-11-04. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  8. "Rai wins title in Hong Kong | Sports". Ekantipur.com. 2014-12-07. Archived from the original on 2015-07-01. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  9. McMahan, Ian (25 June 2015). "Meet Nepal's Breakout Trail Running Phenom". Outside Online. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  10. Stéphane Huët. "The inspiration of a long-distance runner | Nepali Times Buzz". Nepali Times. பார்க்கப்பட்ட நாள் 2015-07-10.
  11. Haslam, Chris (2015-11-06). "From teenage guerrilla to top athlete" (in en-GB). https://www.bbc.com/news/magazine-34704385. 
  12. https://www.theguardian.com/world/2015/oct/05/mira-rai-former-child-soldier-athlete-women-nepal
  13. "Mira & the girls running fund". Trail Running Nepal (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-03-31. பார்க்கப்பட்ட நாள் 2019-09-18.
  14. Stéphane Huët. "From teenage guerrilla to top athlete". BBC. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
  15. Running all her life, Nepali Times, பார்க்கப்பட்ட நாள் 13 February 2015
  16. MIRA RAI'S 2016 SEASON, Trial Nepal, பார்க்கப்பட்ட நாள் 30 June 2016
  17. "Mira Rai". Trail Running Nepal. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_ராய்&oldid=3919499" இலிருந்து மீள்விக்கப்பட்டது