முகமது முஜீபு

முகமது முஜீபு (Mohammad Mujeeb)(1902-1985) என்பவர் ஆங்கிலம் மற்றும் உருது இலக்கியம், கல்வியாளர், அறிஞர் மற்றும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் மேனாள் துணைவேந்தர் ஆவார்.[1][2]

முகமது முஜீபு
பிறப்பு1902
இந்தியா
இறப்பு1985 (வயது 83)
பணிஎழுத்தாளர்
கல்வியாளர்
ஆய்வாளர்
செயற்பாட்டுக்
காலம்
1926–1985
அறியப்படுவதுஜாமியா மில்லியா இஸ்லாமியா
விருதுகள்பத்ம பூசண்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

முஜீபு 1902-ல் பிறந்தார்.[3] இவரது தந்தை இலக்னோவைச் சேர்ந்த பணக்கார வழக்கறிஞர் முகமது நசீம் ஆவார்.

முஜீபு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தார். இவர் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் ஆபித் ஹுசைனின் நெருங்கிய நண்பர் மற்றும் கூட்டாளியாக இருந்தார்.[4] ஜாகிர் உசேன் மற்றும் அபித் ஹுசைன் ஆகியோருடன் 1926-ல் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் ஆசிரியராகச் சேர்ந்தார். இதற்காக இந்தியா திரும்பும் முன் ஜெர்மனியில் அச்சு தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சி பெற்றார்.[5]

தொழில் தொகு

முஜீபு வரலாற்று அறிஞர் ஆவார். சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவின் கலாச்சார மற்றும் கல்விச் சூழலில் ஈடுபடு கொண்டவராவார்.[1]

இலக்கியப் படைப்புகள் தொகு

ஆங்கிலம் தொகு

  • புதிய சீனாவின் ஒரு பார்வை (A Glimpse of New China)[6]
  • ஆர்டியல் 1857: ஒரு வரலாற்று நாடகம் (Ordeal 1857: A Historical Play)[7]
  • உலக வரலாறு, நமது பாரம்பரியம் (World history, our heritage)[8]
  • கல்வி மற்றும் பாரம்பரிய மதிப்புகள் (Education and Traditional values)[9]
  • இந்திய முஸ்லிம்களிடையே சமூக சீர்திருத்தம் (Social reform among Indian Muslims)[10]
  • அக்பர் (Akbar)[11]
  • காலிப் (Ghalib)[12]
  • டாக்டர் ஜாகிர் உசேன்: ஒரு வாழ்க்கை வரலாறு (Dr Zakir Hussain: a biography)[13]
  • இந்தியச் சமுதாயத்தின் மீது இஸ்லாமியத் தாக்கம் (Islamic Influence on Indian Society)[14]
  • இந்திய முஸ்லிம்கள் (The Indian Muslims)[15]
  • கல்வி, இலக்கியம் மற்றும் இஸ்லாம் (Education, Literature and Islam)[16]
  • மூன்று நாடகங்கள் (Three Plays)[17]

உருது தொகு

  • துன்யா கி ககானி [18]
  • அசுமாயிசு [19]
  • கஜலியத்-இ-காலிப் [20]
  • தாரிக் ஃபல்சாஃபா-இ-சியாசியத் [21]
  • நிகரிசத் [22]
  • ருசி அடாப் [23]

விருதுகள் தொகு

இலக்கியம் மற்றும் கல்விக்கு முஜீப் செய்த சேவைக்காக, இந்திய அரசு 1965ஆம் ஆண்டு பத்ம பூசண் விருதினை வழங்கியது.[24]

இறப்பு தொகு

முஜீபு 1985-ல் தனது 83 வயதில் இறந்தார்.[25] ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் முஜீப்பின் நினைவாக பேராசிரியர் முகமது முஜீப் நினைவு சொற்பொழிவினை ஆண்டுதோறும் நடத்துகின்றது.[26]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Sean Oliver-Dee (15 September 2012). Muslim Minorities and Citizenship: Authority, Islamic Communities and Shari'a Law. I.B.Tauris. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84885-388-1.
  2. Yasmin Khan (2007). The Great Partition: The Making of India and Pakistan. Yale University Press. pp. 21–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-12078-3.
  3. Shan Muhammad (2002). Education and Politics: From Sir Syed to the Present Day : the Aligarh School. APH Publishing. pp. 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-275-2.
  4. "Bapu's effort to get allowance for Prof Mujeeb". Urdu Figures. 5 December 2010. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  5. "Prof Mohammad Mujeeb". Jamia Millia Islamia. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  6. Mohammad Mujeeb (1952). A Glimpse of New China. Maktaba Jamia.
  7. Mohammad Mujeeb. Ordeal 1857: A Historical Play. Asia Publishing House.
  8. Mohammad Mujeeb. World history, our heritage. Asia Pub. House.
  9. Mohammad Mujeeb. Education and Traditional Values. Meenakshi Prakashan.
  10. Mohammad Mujeeb. Social Reform Among Indian Muslims. Delhi School of Social Work, University of Delhi.
  11. Mohammad Mujeeb. Akbar. National Council of Educational Research and Training. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88253-350-6.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Mohammad Mujeeb. Ghalib. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7201-708-8.
  13. Mohammad Mujeeb. Dr. Zakir Husain: a biography. National Book Trust, India; [chief stockists in India: India Book House, Bombay.
  14. Mohammad Mujeeb. Islamic Influence on Indian Society. Meenakshi Prakashan.
  15. Mohammad Mujeeb. The Indian Muslims. Munshiram Manoharlal. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-215-0027-2.
  16. Mohammad Mujeeb (1 January 2008). Education, literature, and Islam: writings by Mohammad Mujeeb. Shipra Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7541-395-5.
  17. Mohammad Mujeeb. Three Plays by M. Mujeeb.
  18. Mohammad Mujeeb. Dunyā kī kahānī. Maktabah-i Jāmiʻa.
  19. Mohammad Mujeeb. Āzmāʼish.
  20. Mirza Asadullah Khan Ghalib. Gazaliat E Galib: Galib's Selected Gazals in Roman. Muslim Progressive Group; distributors: Galib Academy.
  21. Mohammad Mujeeb. Tārīḵẖ-i falsafah-yi siyāsiyāt. Naishnal Buk Ṭrasṭ.
  22. Mohammad Mujeeb. Nigārishāt. Maktabah-yi Jāmiʻah.
  23. Mohammad Mujeeb. Rūsī adab. Maktabah-yi Jāmiʻah.
  24. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  25. "Mujeeb, M. (Mohammad) 1902-1985". WorldCat. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  26. "Professor Mohammad Mujeeb Memorial Lecture". Jamia Millia Islamia. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_முஜீபு&oldid=3643548" இலிருந்து மீள்விக்கப்பட்டது