முகமது மொகிம்

இந்திய அரசியல்வாதி

முகமது மொகிம் (Mohammed Moquim) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] 1965 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றிய இவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கட்டாக் மாவட்டம் பாராபதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] இவர் பிர்தௌசியா பானோவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு சோபியா பிர்தௌசு மற்றும் நைமா தாச்சின் என்ற 2 மகள்கள் உள்ளனர்-

முகமது மொகிம்
Mohammed Moquim
ஒடிசாவின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்தேபாசிசு சமந்தரே
தொகுதிபாராபதி-கட்டக் (அரசியலமைப்பு சபை)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபாராபதி-சுட்டக்]]
3 சூலை 1965 (1965-07-03) (அகவை 58)
இறப்புபாராபதி-சுட்டக்]]
இளைப்பாறுமிடம்பாராபதி-சுட்டக்]]
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பிர்தோசியா பானோ
பெற்றோர்முகம்மது நயீம் (தந்தை)
வாழிடம்(s)லால்பாக்கு கட்டக் மாவட்டம், ஒடிசா
முன்னாள் கல்லூரிஒரிசா பொறியியல் கல்லூரி, புவனேசுவர்
தொழில்அரசியல்வாதி

முகமது மொகிம் கட்டாக் மாவட்டம் லால்பாக் பகுதியை சேர்ந்தவராவார். இவரது தந்தை பெயர் முகமது நயீம் என்பதாகும். 1990 ஆம் ஆண்டில் ஒரிசா பொறியியல் கல்லூரியில் பொறியியலில் தேர்ச்சி பெற்றார்.[5] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6][7][8]

மேற்கோள்கள் தொகு

  1. Staff Reporter (2021-01-24). "Odisha Cong. MLA files defamation suit against Sambit Patra" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/odisha-cong-mla-files-defamation-suit-against-sambit-patra/article33651187.ece. 
  2. "Members Profile on assembly website". odishaassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  3. "Barabati-Cuttack Assembly Election Results 2019 Live: Barabati-Cuttack Constituency (Seat) Election Results, Live News". www.news18.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  4. "Barabati Cuttack Assembly Elections 2019, Barabati Cuttack Election Latest News, Candidates List, Party Name, Results, Voting, Poll Date, Timing & Schedule". India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  5. "Mohammed Moquim (Indian National Congress(INC". {{cite web}}: Missing or empty |url= (help):Constituency- BARABATI-CUTTACK(CUTTACK) - Affidavit Information of Candidate|url=https://myneta.info/odisha2019/candidate.php?candidate_id=5164%7Caccess-date=2021-05-26%7Cwebsite=myneta.info}}
  6. "Odisha Election Results 2019: BJD wins 112 assembly seats, BJP settles at 23 | Bhubaneswar News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). TNN. May 24, 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  7. "Moquim serves legal notice on Patra, demands apology - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  8. "Samantaray faces tough fight from Moquim, Dey - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_மொகிம்&oldid=3926347" இலிருந்து மீள்விக்கப்பட்டது