முடிச் சீராக்கி

முடிச் சீராக்கி (Hair conditioner) என்பது முடியின் அமைப்பினையும், தோற்றத்தினையும் மாற்றும் முடி பராமரிப்பு தயாரிப்பு ஆகும். முடிச் சீராக்கி பாகு நிலையிலுள்ள ஒரு திரவம், அது முடிக்கு ஒத்தடம் கொடுக்க பயன்படுகிறது. பொதுவாக சிகைக் கழுவியினால் முடியை கழுவிய பிறகே முடிச் சீராக்கி உபயோகப்படுத்தபடுகிறது. முடிச் சீராக்கி முடியினை மென்மையாகவும், பளபளப்பானதாகவும் மாற்றுகிறது. முடிச் சீராக்கி ஈரப்படுத்தி(moisturizer), எண்ணெய்கள் மற்றும் வெப்பத் திரை(sun screen) உட்பட பல்வேறு மூலப்பொருட்களால் ஆனது.

டுபே நிறுவனத்தின் 9 முடி பராமரிப்பு தயாரிப்புக்ளுக்கு 19 நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் ஆகும்.

சிகைக் கழுவி பயன்படுத்தி முடியைக் கழுவுவதால், முடியிலிருந்த அழுக்குகள் மட்டுமின்றி மயிரடிச்சுரப்புகளும் நீக்கப்படுகின்றன. முடிச் சீராக்கியானது உயிர்ச்சத்துக்கள், புரதம், பழச்சாறுகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அது முடிக்குத் தேவையான பளபளப்பு, உறுதி மற்றும் ஊட்டத்தினையும் கொடுக்கிறது. முடிச் சீராக்கி பயன்படுத்துவதால் முடி அலங்காரத்தினை அவரவர் விருப்பபடி எளிதாக மாற்றியமைக்கலாம்[1].

பழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் போன்றவைகள் இயற்கை முடிச் சீராக்கியாக பயன்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. "முடிச்சீராக்கி". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 15, 2015.

வெளிப்புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
hair care
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முடிச்_சீராக்கி&oldid=2598465" இலிருந்து மீள்விக்கப்பட்டது