முதலாம் நெபுகத்நேசர்

முதலாம் நெபுகத்நேசர் (Nebuchadnezzar I) பாபிலோனியாவின் இசின் இராச்சியத்தின் இரண்டாம் வம்சத்தின் நான்காம் மன்னர் ஆவார். இவர் பாபிலோனியாவை ஏறத்தாழ கிமு 1125 முதல் 1104 முடிய 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவர் தனது ஆட்சிக் காலத்தில் அருகமைந்த ஈலாம் இராச்சியத்தை வென்று அங்கிருந்த கடவுள் மர்துக்கின் சிலையை மீண்டும் பாபிலோனுக்கு மீட்டு வந்தார். இவருக்கும் இரண்டாம் நெபுகாத்நேசர் மற்றும் நான்காம் நெபுகத்நேசருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

முதலாம் நெபுகத்நேசர்
பாபிலோனியாவின் மன்னர்
பாபிலோனியப் பெண் தெய்வம் நிங்டினுக்கா, அவளது நாய் மற்றும் வில் ஏந்திய தேள் மனிதன் சிற்பம், நிப்பூர் [1]
ஆட்சிஏறத்தாழ கிமு 1125 – 1104
முன்னிருந்தவர்நினுர்தா-நாதின்-சும்
பின்வந்தவர்என்லில்-நாதின்-அப்லி
மரபுஇசின் இராச்சியத்தின் இரண்டாம் வம்சம்

முதலாம் நெபுகத்நேசர் அமோரிட்டுகளின் நிலத்தை வென்றவர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.[nb 1] [2]இவர் பாபிலோனியக் கடவுள்களான ஆதாத், என்லில் ஆகியவற்று நிப்பூர் நகரத்தில் செங்கற்களால் கோயில் கட்டினார்.

நெபுகத்நேசரின் எல்லைக்கல் வடிவிலான சிற்பக் கல்வெட்டின் காகிதப் பிரதி


முதலாம் நெபுகத்நேசரின் எல்லைக்கல் வடிவிலான சிற்பக் கல்வெட்டு கல்வெட்டு[3]


குறிப்புகள் தொகு

  1. KUR.MAR.TU.KI.

மேற்கோள்கள் தொகு

  1. "boundary-stone; kudurru British Museum". The British Museum (in ஆங்கிலம்).
  2. J. A. Brinkman (2001). "Nebukadnezar I". In Erich Ebeling; Bruno Meissner; Dietz Otto Edzard (eds.). Reallexikon der Assyriologie und Vorderasiatischen Archäologie: Nab – Nuzi. Walter De Gruyter Inc. pp. 192–194.
  3. boundary-stone; kudurru


"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_நெபுகத்நேசர்&oldid=3779777" இலிருந்து மீள்விக்கப்பட்டது