முதலாம் மகிபாலன் (பிரதிகார வம்சம்)

முதலாம் மகிபாலன் (Mahipala I) (சுமார் 913-944 பொ.ஊ) தனது வளர்ப்பு சகோதரர் இரண்டாம் போஜனுக்குப் பிறகு பிரதிகார வம்சத்தின் அரியணை ஏறினார்.[1] இராணி மகிதேவியின் மகனான இவர்,[2] சிதிபாலன், விநாயகபாலன், ஹேரம்பபாலன், உத்தரபாத சுவாமி போன்ற பெயர்களாலும் அறியப்பட்டார். [3]

முதலாம் மகிபாலன்
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் 9வது மன்னன்
ஆட்சிக்காலம்அண். 913 – அண். 944
முன்னையவர்இரண்டாம் போஜன்
பின்னையவர்இரண்டாம் மகேந்திரபாலன்

ஆட்சி தொகு

இராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் இந்திரனின் போர் முற்றுகை கன்னோசி மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும், அரசவைக் கவிஞர் இராசசேகரன் இவரை ஆரியவர்த்தத்தின் மகாராஜாதிராஜா என்று அழைக்கிறார். இவர் கன்னோசிக்கு புத்துயிர் அளித்தார் என்றும் தெரிகிறது. இராஜசேகரனின் காவ்யமீமிமான்சத்தின்படி [4] மகிபாலனின் ஆட்சியானது வடமேற்கில் பியாஸ் ஆற்றின் மேற்பகுதியிலிருந்து தென்கிழக்கில் கலிங்கம் அல்லது ஒடிசா வரையிலும், இமயமலையிலிருந்து தெற்கே கேரளா அல்லது சேர நாடு வரையிலும் பரவியிருந்தது. [5]

மகிபாலன் நருமதை வரையிலான பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தார் என்பது பார்தப்கார் கல்வெட்டிலிருந்து தெளிவாகிறது. இக் கல்வெட்டு 946 இல் உஜ்ஜைனியில் அவரது மகன் இரண்டாம் மகேந்திரபாலன் ஆட்சி செய்தது பற்றிய தகவலை வழங்குகிறது. வரலாற்றாளர் ஆர். எஸ்.திரிபாதி, இரண்டாம் மகேந்திரபாலன் எந்த சாதனையும் செய்யாததால், உஜ்ஜையினியை மீட்ட முதலாம் மகிபாலன் தான் மன்னராக இருந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். [6][7][8]

வர்தமானிவில் (இப்போது குசராத்தின் சௌராட்டிரப் பகுதியில் உள்ள வாத்வான் ) ஆட்சி செய்த சாப்பா அல்லது சாவ்டா ஆட்சியாளரான தரணிவராகன், மகிபாலனின் நிலப்பிரபுவாக இருந்தார் என அவரது 914 தேதியிட்ட மானியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது [9] [10] .

சான்றுகள் தொகு

  1. Radhey Shyam Chaurasia (2002). History of Ancient India: Earliest Times to 1000 A. D. Atlantic Publishers & Distributors. p. 208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-269-0027-5.
  2. Asni inscription
  3. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  4. Kavyamimansa of Rajasekhara, ch. XVII, P. 94
  5. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. pp. 262–264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  6. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. p. 264. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  7. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. p. 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  8. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. p. 222. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  9. Rama Shankar Tripathi (1989). History of Kanauj: To the Moslem Conquest. Motilal Banarsidass Publ. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0404-3.
  10. Bhandarkar (1929). Appendix To Epigraphia Indica And Record Of The Archaeological Survey of India. Archaeological Survey of India.