முனைவர் ஒய். எசு. ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம்

முனைவர் ஒய். எசு. ஆர். தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் (Dr. Y.S.R. Horticultural University)(முன்பு ஆந்திரப் பிரதேச தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தாடேபள்ளிகூடம் அருகே உள்ள வெங்கடராமன்னகூடமில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகமாகும். இது 2007ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தோட்டக்கலை அறிவியலின் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

முனைவர் ஒய். எசு. ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்
ஆந்திரப் பிரதேச தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2007
அமைவிடம், ,
16°52′59″N 81°27′05″E / 16.8831°N 81.4513°E / 16.8831; 81.4513
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.drysrhu.ap.gov.in

வரலாறு தொகு

முனைவர் ஒய். எசு. ஆர். தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் 2007ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால் ஆந்திரப் பிரதேச தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் என மேற்கு கோதாவரி மாவட்டத்தில் வெங்கடராமன்னகூடம், மகபூப் நகர் மாவட்டத்தில் மோஜர்லா மற்றும் கடப்பா மாவட்டத்தில் ஆனந்தராஜுபேட்டை ஆகிய இடங்களில் மூன்று தோட்டக்கலை கல்லூரிகளுடன் இணைந்து நிறுவப்பட்டது. ஆச்சார்யா என். ஜி. ரெங்கா வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் சில வேளாண் கல்வித் திட்டங்கள் சில காலம் செயல்படுத்தப்பட்டன. 2008ஆம் ஆண்டு முதல் துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை அரசாங்க அதிகாரியால் இப்பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டது.[1] பின்னர் இது துணைவேந்தர் நிர்வாகத்தின் கீழ் மாறியது. இது 2011இல் முனைவர் ஒய். எசு. ஆர். தோட்டக்கலை பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது.[2] இப்பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் தோ. ஜானகிராம் ஆவார்.

இணைவு கல்லூரிகள் தொகு

பல்கலைக்கழகத் துறைகள் தொகு

  • பழ அறிவியல்
  • காய்கறி அறிவியல்
  • மலர் வளர்ப்பு மற்றும் நிலத்தோட்டமிடல்
  • மசாலா, தோட்டம், மருத்துவம் & நறுமணப் பயிர்கள்
  • அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம்
  • பூச்சியியல்
  • தாவர நோயியல்
  • மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம்
  • வேளாண்மை மற்றும் மண் அறிவியல்
  • தாவர உடலியல், உயிர்வேதியியல் & நுண்ணுயிரியல்
  • ஆங்கிலம், புள்ளியியல் & சமூக அறிவியல்
  • தோட்டக்கலை பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் கால்நடை பராமரிப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome to Dr.Y.S.R Horticultural University". Dr. Y.S.R. Horticultural University. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  2. "Dr.Y.S.R Horticultural University". Dr. Y.S.R. Horticultural University. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.

வெளி இணைப்புகள் தொகு