மூன்றாம் ஹர்ஷவர்மன்

மூன்றாம் ஹர்ஷவர்மன் ( Harshavarman III ) 1066 முதல் கிபி 1080 வரை கெமரை ஆட்சி செய்த அரசனாவார். [1] தனது மூத்த சகோதரர் இரண்டாம் உதயாதித்யவர்மனுக்குப் பிறகு பதவியேற்றார். [2] :139[3] :376 இவரது தலைநகரம் இரண்டாவது யசோதராபுரம் என்று அழைக்கப்பட்டது. அதன் மையம் பாபூனில் இருந்தது. கம்போடியாவின் கலாச்சார அடிப்படையில் இவரது சகோதரரால் கட்டப்பட்டது. இவர் ராணி காம்புஜராஜலட்சுமியை மணந்தார்.

மூன்றாம் ஹர்ஷவர்மன்
கம்போடிய அரசன்
ஆட்சிக்காலம்1066–1080
முன்னையவர்இரண்டாம் உதயாதித்தவர்மன்
பின்னையவர்ஆறாம் செயவர்மன்
இறப்பு1080
மறைவுக்குப் பிந்தைய பெயர்
சதாசிவபாதன்
மதம்இந்து சமயம்

இவரது ஆட்சி உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டது. இறுதியில் இவரால் போரிட முடியவில்லை. எனவே இவரே அவரது வம்சத்தின் கடைசி ஆட்சியாளரானார். இவரது வாரிசான ஆறாம் செயவர்மன், இன்றைய தாய்லாந்தில் உள்ள கோராட் பீடபூமியில் உள்ள பிமாய் பகுதியிலிருந்து ஆட்சி செய்தார்.[4] ஹர்ஷவர்மன் தனது இறப்பிற்குப் பின்னர் சதாசிவபாதர் என்றப் பெயரைப் பெற்றார். [2]

1191இல் சம்பா இராச்சியத்தின் மீதான வெற்றிக்குப் பின்னர், பிரே கான் என்னுமிடத்தில் உள்ள கோயில் வளாகத்தில் [5] ஏழாம் செயவர்மனான தனது தந்தையை கௌரவிப்பதற்காக ஒரு கோயில் அமைப்பை கட்டினார். ஆனாலும் இது குறித்த வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.[6]

1074 மற்றும் 1080 க்கு இடையில், இவரது நாடு சம்பா இராச்சியத்தின் மன்னர் நான்காம் ஹரிவர்மனின் இளைய சகோதரரான இளவரசர் பாங்கின் படையெடுப்பிற்கு ஆளாக வேண்டியிருந்தது. சம்பாபுரம் கோயில்கள் அழிக்கப்பட்டு, இளவரசர் நந்தவர்மதேவ்ன் உட்பட குடிமக்கள் அனைவரும் என் மகனுக்கு அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டனர்.[2]:152[7]:72

1076 ஆம் ஆண்டில், கம்போடியாவும் சம்பாவும் டோங்கின் பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சொங் வம்சத்தால் ஆளப்பட்டன. தய் வியட் இராச்சியத்துடனான சீன இராணுவத்தின் தோல்வி அதன் நட்பு நாடுகளின் உறவை முறிக்க வழிவகுத்தது. [2]

அடிக்குறிப்புகள் தொகு

  1. W., Aphisit. "Angkor Era - Part II (1001 - 1181 A.D)". cambodia-travel. Cambodia Tours. Archived from the original on 3 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  3. Higham, C., 2014, Early Mainland Southeast Asia, Bangkok: River Books Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443
  4. Higham, 2003, pp.107 ff
  5. W., Aphisit. "Angkor Era - Part I (834 - 1000 A.D)". cambodia-travel. Cambodia Tours. Archived from the original on 11 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. John, Sunday; et al. (April 11, 1997). "Preah Khan Conservation Project - Report VII Appendix A" (PDF). New York, USA: World Monuments Fund. pp. 27–28. Archived from the original (PDF) on May 16, 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-08-17.
  7. Maspero, G., 2002, The Champa Kingdom, Bangkok: White Lotus Co., Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9747534991

குறிப்புகள் தொகு

அரச பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் உதயாதித்தவர்மன்
கம்போடிய அரசன்
1066–1080
பின்னர்
ஆறாம் செயவர்மன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_ஹர்ஷவர்மன்&oldid=3702116" இலிருந்து மீள்விக்கப்பட்டது