மூலங்கீரனார்

மூலங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கீரன். கீரனார் என்பது இவரைச் சிறப்பிக்கும் மொழிவழக்கு. இவரது தந்தையார் பெயர் மூலன். இவரது பெயரை வேறு வகையிலும் எண்ணிப் பார்க்கலாம். மூலநாளில்(மூல நட்சத்திரத்தில்) பிறந்த கீரனார் என்பது அந்த வேறு வகை.

இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 73.

பாடல் சொல்லும் செய்தி தொகு

பாலைத் திணை

தலைவன் பிருந்து செல்ல இருப்பதை அறிந்து தலைவி சொல்கிறாள்.

சாய்க்காடு தொகு

சாய்க்காடு சங்ககாலத்திலும் சிறப்புற்று விளங்கிய ஊர்களுல் ஒன்று. செவ்வரி மயிரை நிரைந்து வைத்தது போல வயல்களில் நெற்கதிர் சாய்ந்து கிடக்குமாம். அங்கு அன்னப் பறவைகள் உறங்குமாம். இந்தச் சாய்க்காடு போலத் தலைவியின் நெற்றி அழகிதாம்.

இந்த நெற்றியைப் பசலைநோய் அழிக்கவும், அயலோர் அம்பல் தூற்றவும் விட்டுவிட்டுச் செல்ல இருக்கிறார் என்று பேசிக்கொள்கின்றனர் என்று தலைவி கவலை கொள்கிறாள்.

புன்கண் மாலை தொகு

மாலை வேளையில் ஊர்மக்களே ஒன்றுதிரண்டு சென்று வல்வாய்ப் பேய்க்கு மலர் தூவி வழிபடுவார்களாம். அந்தப் பேயின் சிலை முருக்கம் பூ போல விரல்களைக் கொண்டிருக்குமாம்.

இப்படி வழிபடவேண்டிய மாலைவேளை வந்தால் தனியே என்செய்வேன் என்று தலைவி கலங்குகிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலங்கீரனார்&oldid=2718212" இலிருந்து மீள்விக்கப்பட்டது