மெங்கு சூக்ரி

மெங்கு சூக்ரி (Menguse-ü Süokhrie)(பிறப்பு 16 செப்டம்பர் 1987), என்பவர் மெங்கு சுயோக்ரியால் எனும் நாடகப் பெயரால் நன்கு அறியப்பட்டவர். இவர் நாகாலாந்தைச் சேர்ந்த நாகா மொழி பாடகர்-பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். இவர் தனது முதல் இசைத்தொகுப்பான லவ் இஸ் ஆல் வி நீட் மூலம் பிரபலமடைந்தார். 2017ஆம் ஆண்டு நானா: எ டேல் ஆஃப் அஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் நாகாலாந்திலும் நன்கு அறியப்பட்டவர். இந்தப்படம் மாநிலத்தில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

மெங்கு சூக்ரி
பிறப்புMenguse-ü Süokhrie
16 செப்டம்பர் 1987 (1987-09-16) (அகவை 36)
கோகிமா, நாகலாந்து, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்திருமுழுக்கு கல்லூரி கோகிமா
பணி
  • நடிகை
  • கவிஞர்
  • இசையமைப்பாளர்
  • ஒலிப்பதிவாளர்
  • வாய்பாட்டு ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012–முதல்
இசை வாழ்க்கை
பிறப்பிடம்கோகிமா, நாகலாந்து, இந்தியா
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு, கிட்டார், கீபோர்டு, உகுலேலே

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மெங்கு சுயோக்ரி 16 செப்டம்பர் 1987 அன்று,[1] நாகாலாந்தின் கோகிமாவில், கோகிமா கிராமத்தைச் சேர்ந்த லிசே-மியா தினுவோ (எல்-கேல்) அங்கமி நாகா குடும்பத்தில் பிறந்தார். [2]

சுயோக்ரி பாரம்பரிய மற்றும் தற்கால இசையில் பாடங்களைக் கொண்டிருந்தார். இவர் 2004 முதல் 2006 வரை நாகாலாந்தின் கோகிமாவில் உள்ள மினிஸ்டர்ஸ் ஹில் பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். கோகிமாவில் உள்ள பாப்டிஸ்ட் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

தொழில் தொகு

2017ஆம் ஆண்டில், நாகமீஸ் திரைப்படமான நானா: எ டேல் ஆஃப் அஸ் இல் சூக்ரி நடித்தார். தியாகும்சுக் ஏயர் இயக்கிய இந்தப் படத்தை அயோயிம்டி யூத் மினிஸ்ட்ரி தயாரித்தது. இப்படத்தில் சுக்ரி அனோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். நாகாலாந்தில் இப்படம் வெற்றி பெற்றது.[3]

திரைப்படவியல் தொகு

திரைப்படம்
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
2013 ட்ரூ லவ் வில் வெயிட் தன்னை குறும்படம்
2017 நானா: எ டேல் ஆப் அஸ் அனோ
2018 அமைதிக்கு இடையே அம்மா குறும்படம்

திரைப்படவியல் தொகு

இசைத்தொகுப்புகள் தொகு

லவ் இஸ் ஆல் வி நீடு
இசைத்தொகுப்பு
வெளியீடுபிப்ரவரி 2012
இசைப் பாணிபாப் பாடல்
நீளம்47:07
மொழிஆங்கிலம் & டெனிடி

 

வ. எண் தலைப்பு இசை மொழி நீளம்
1. "யூ ஆர் மைன்" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 3:16
2. "எ கெச்சா-மெங்கு" மெங்கு சூக்ரி டெனிடி 3:24
3. "லவ் இஸ் ஆல் வீ நீடு" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 6:04
4. "லவ் இஸ் ஆல் வீ நீடு - பியானோ" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 6:03
5. "எளிமையான பாடல்" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 4:21
6. "கெனி தேனோ கெனி" மெங்கு சூக்ரி டெனிடி 3:53
7. "பியூட்டிபுல் சோல்" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 4:43
8. "நெவர் கிவ் அப்" மெங்கு சூக்ரி ஆங்கிலம் 3:23
9. "செண்ட் பிரம் கெவன்" மெங்கு சுயோக்ரி ஆங்கிலம் 3:52
10. "யுவர் லவ்- டியர் மதர்" மெங்கு சுயோக்ரி ஆங்கிலம் 4:11
11. "மை பிரண்ட்ஸ் மை வார்ல்டு" மெங்கு சுயோக்ரி ஆங்கிலம் 5:17

மற்ற பாடல்கள் தொகு

# பாடல்மொழி நீளம்
1. "ரெஸ்ட் இன் பீசு"  ஆங்கிலம் 4:01[4]

விருதுகள் தொகு

விஜோ தக்ரோ இடம் பெறும் டில் வி டர்ன் கிரே பாடலுக்கான சிறந்த காதல் பாடல் மற்றும் 7வது நாகாலாந்து இசை விருதுகள் 2015-ல் லவ் இஸ் ஆல் வி நீட் பாடலுக்கான சிறந்த பாடல் விருது கிடைத்தது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Mengu Suokhrie's birthday". Instagram. 15 September 2017. Archived from the original on 5 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "Mengu Suokhrie set to release single a tribute to all mothers". Archived from the original on 2017-05-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  3. "Naga film 'Nana – A Tale Of Us' released". Archived from the original on 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  4. "Imli Lee feat. Mengu Suokhrie releases video 'Rest in Peace'". Archived from the original on 2017-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-03-05.
  5. "7th Nagaland Music Awards 2015".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெங்கு_சூக்ரி&oldid=3702139" இலிருந்து மீள்விக்கப்பட்டது