மென்பொருள் பராமரித்தல்

மென்பொருள் பராமரித்தல் (Software maintenance) என்பது மென்பொருட் பொறியியலில் ஒரு மென்பொருளை நுகர்வோரிடம் விற்ற பிறகு அதில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வதும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதும் மற்றும் அது சரியான முறையில் செயல்பட துணைபுரிவதும் ஆகும்.[1]

வழுக்களை களைவது மட்டுமே மென்பொருள் பராமரிப்பு என்ற பொதுமையான கருத்து நிலவுகிறது; இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, 80%க்கும் மேற்பட்ட பராமரிப்புப் பணிகள் வழுக்களைதல் அல்லாத செயற்முறைகளில் செலவிடப்படுகிறது.[2] பயனர்கள் வழுக்கள் என்று சமர்ப்பிக்கும் அறிக்கைகள் யாவையுமே உண்மையில் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் முயற்சிகளாகும். அண்மைய ஆய்வுகள் வழு-களைதல் வீதத்தை 21%ஆக நிலைநிறுத்துகின்றன.[3]

1969இல் மெயர் எம். லெமேன் என்பார் மென்பொருள் பராமரிப்பு மற்றும் மென்பொருள் கூர்ப்பு குறித்து முதன்முதலில் விவரித்திருந்தார். தொடர்ந்த 20 ஆண்டுகளில் அவரது ஆய்வு மென்பொருள் கூர்ப்பிற்கான லெமேன் விதிகள் (1997) உருவாக காரணமாயிற்று. அவரது ஆய்வின் முதன்மையான முடிவுகளாக மென்பொருள் பராமரிப்பு உண்மையில் மென்பொருள் கூர்ப்பின் வளர்ச்சியே என்றும் மென்பொருள் அமைப்பு காலப்போக்கில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே பராமரிப்பு தீர்வுகள் அமைகின்றன என்றும் அறிவித்தன. லெமேன் காலப்போக்கில் அமைப்புக்கள் மேம்படுத்தப்படுகின்றன என்பதை நிறுவினார். அவை வளரும்போது அவற்றின் நிரல்வரிகள் சிக்கலாகிக்கொண்டு போவதால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவற்றை மீளமைத்து நிரல்வரிகளின் சிக்கலை எளிமைப்படுத்துவது தேவையாகிறது.

மென்பொருள் பராமரிப்பின் பிரச்சினைகள் மேலாண்மை சார்ந்த அல்லது தொழினுட்பம் சார்ந்த என முதன்மையான இரு பிரிவுகளில் வகுக்கலாம். முக்கிய மேலாண்மை பிரச்சினைகள்:பயனாளர் முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைப்பு, பணியாளர் சேர்க்கை, செலவின மதிப்பீடு. முக்கிய தொழினுட்ப பிரச்சினைகள்: புரிதல் குறைபாடு, தாக்கப் பகுப்பாய்வு, சோதனைகள், பராமரிப்பு அளவீடு.

மேற்சான்றுகள் தொகு

  1. "ISO/IEC 14764:2006 Software Engineering — Software Life Cycle Processes — Maintenance". Iso.org. 2011-12-17. பார்க்கப்பட்ட நாள் 2013-12-02.
  2. Pigoski, Thomas M., 1997: Practical software maintenance: Best practices for managing your software investment. Wiley Computer Pub. (New York)
  3. Eick, S., Graves, T., Karr, A., Marron, J., and Mockus, A. 2001. Does Code Decay? Assessing Evidence from Change Management Data. IEEE Transactions on Software Engineering. 27(1) 1-12.

மேலறிதல் நூல்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்பொருள்_பராமரித்தல்&oldid=3583140" இலிருந்து மீள்விக்கப்பட்டது