மெர்சி எதிரிசிங்க

மெர்சி எதிரிசிங்க (பிறப்பு 1945/1946-17 மார்ச் 2014) இலங்கையின் பிரபலமான நடிகையும் பாடகியும் ஆவார். 1964 ஆம் ஆண்டில் நாவக மடலா என்ற பாடலை பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாகும். 1966 ஆம் ஆண்டில் தன் நடிப்புப் பணியைத் துவக்கினார். தாராவே இகிலேதி (டக்ஸ் பிளய்) என்ற இவர் பாடிய பாடல் பிரபலமானது. இப் பாடலுக்கு லூசியன் புளத் சிங்கள இசையமைத்தார். குணதாச கபுகே இசையமைத்த மட லெகின தரவன் என்ற வெற்றிப் பாடலையும் பாடினார். நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், வானொலி நாடகங்களிலும் பாத்திரம் ஏற்றுள்ளார். வினோத சாமா என்ற புகழ்பெற்ற வானொலி நிகழ்ச்சியில் அனெஸ்லி டயஸ், பெர்தி குணல்டிகே, மற்றும் சாமுவேல் ரொட்ரிகொ ஆகியோருடன் இணைந்து பங்கு கொண்டார்.[1]

மெர்சி எதிரிசிங்க
பிறப்பு1945/1946
அம்பே புஸ்ஸ, இலங்கை
இறப்பு(2014-03-17)17 மார்ச்சு 2014
கம்பகா, இலங்கை
பணிநடிகை, நகைச்சுவையாளர், பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1964–2012

வாழ்வும் பணியும் தொகு

மெர்சி எதிரிசிங்க கிரேஸ் பெரேரா, டொன் லோரன்ஸோ எல்வின் எதிரிசிங்க ஆகியோரின் புதல்வியாவார். மெர்சி கத்தோலிக்கர். இவர் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.

மெர்சியின் கணவர் லலித் கொடவெல களுத்துறையைச் சேர்ந்த பௌத்த மதத்தவர். இத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. திருமணத்திற்கு பின் பயணமொன்றை மேற்கொள்ளும் போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லும்பினி திரையரங்கில் முத்து குமரி என்ற மேடை நாடகத்தில் மெர்சி நடித்தார்.

1966 ஆம் ஆண்டில் ரத்னவின் உகுரட்ட ஹொர பெஹத் என்ற மேடை நாடகம் இவரது முதல் மேடை நாடகமாகும். மெர்சி ரன்கந்த, சீலாவதி  ஆகிய மேடை நாடகங்கள் உட்பட பல மேடை நாடகங்களில் பாத்திரமேற்று நடித்திருக்கின்றார். இவர் திறமையான நடிகை மட்டுமல்ல நல்ல பாடகியும் நகைச்சுவை நடிகையும் ஆவார்.

இறப்பு தொகு

மரணத்திற்கு இரு வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பின்பு இடுப்பு வலியினால் அவதிப்பட்டார்.[2] 17 மார்ச் 2014 இல் தனது 68வது வயதில் கம்பகாவில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[3]

விருதுகள் தொகு

1974 ஆம் ஆண்டு மெர்சி மாநில நாடக விழாவில் ஆர். ஆர். அமரகோனின் ‘இதம’ மேடை நாடகத்தில் பாத்திரமேற்று நடித்தமைக்கு சிறந்த நடிகை விருதை வென்றார். மேலும் சிறந்த நடிகைக்கான விருதை 1975, 1976 ஆம் ஆண்டுகளில் வென்றார்.[4]

2014 ஆம் ஆண்டில் மாநில நாடக விழாவில் தமது ஐம்பது ஆண்டுகள் கலையுலக பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்.

மேடை நாடகங்கள் தொகு

  • உகுரட்ட ஹொர பெகத்
  • ரன் கந்த
  • சீலாவதி
  • விஷ்வ சுந்தரி
  • முத்து குமரி
  • தாரவோ இகலதி
  • இதம
  • துன்ன தனு கமுவ
  • அல்லப்பு கெதர
  • தௌலோ தொனி

வானொலி தொகு

மெர்சியின் குரல் இலங்கை வானொலி நாடகங்களில் பிரபலமானது.

  • முவன்பெலஸ்ஸ
  • வஜிர
  • சமனல பெத்தா
  • ஹன்திய கெதர
  • வினோத சமய

இசை அல்பம் தொகு

  • கயய் மெர்சி கீ
  • மல வடகர பம்பர ரெனா

திரைப்பட விபரங்கள் தொகு

  • இல. இலங்கை சினிமா துறையின் இலங்கை திரைப்படங்களின் எண்ணிக்கையை குறிக்கின்றது.[5]
வருடம் இல. திரைப்படம் பாத்திரம்
1976 342 தியாமனதி குணாவின் மனைவி
1979 417 பலகட்டியோ சோமா அக்கா
1979 435 நுவன் ரேணு
1984 606 முத்து மெனிக்கே
1989 688 ஒக்கம ரஜரு
1990 704 ஹோதின் நெத்தம் நரகின்
1990 714 ஹித ஹொந்த புதக்
1991 725 ஆசய் பயய்
1994 801 தவல புஸ்பயா
1994 808 மவ்பிம வீரயோ
1995 828 தேவ்யானி சத்யா சுரகின்ன ஜூன்
1996 847 ரத்தரன் மல்லி
1997 871 புதுனி மட வசன்ன நலிகா
2017 1286 செல்லம் நெத்தம் வல்லம் பொஸ்துமஸ் வெளியீடு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்சி_எதிரிசிங்க&oldid=3591290" இலிருந்து மீள்விக்கப்பட்டது