மேடக் கோட்டை

மேடக் கோட்டை இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்காலக் கோட்டை. இது மாநிலத் தலைநகரமான ஐதராபாத்துக்கு வடக்கே அங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] சிறு குன்றொன்றின்மீது அமைந்த இக்கோட்டை காகதீய அரசர்களுக்கு ஒரு வாய்ப்பான அமைவிடமாக இருந்தது.

மேடக் கோட்டை

இக்கோட்டை காகதீய அரசனான பிரதாபருத்திரனால் 12 ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டது. அப்போது இது தெலுங்கில் "சமைத்த அரிசி" என்னும் பொருள்படும் "மெதுக்கு துர்கம்" என்னும் பெயர் கொண்டிருந்தது. இது முதலில் காகதீயர்களுக்கும், பின்னர் குதுப் சாகிகளுக்கும் ஒரு கட்டளை நிலையமாகச் செயற்பட்டது. இக்கோட்டை ஆந்திரப் பிரதேசத்தின் வரலாறு, கட்டிடக்கலை என்பன தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கோட்டையுள், 17 ஆம் நூற்றாண்டில் குதுப் சாகிகளால் கட்டப்பட்ட ஒரு மசூதியும், தானியக் கிடங்குகள் முதலியனவும் உள்ளன.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடக்_கோட்டை&oldid=2643140" இலிருந்து மீள்விக்கப்பட்டது