திரான் லி சுவான் (Trần Lệ Xuân) (பிறப்பு: 1924 ஆகத்து 22- இறப்பு: 2011 ஏப்ரல் 24) [1] ஆங்கிலத்தில் மிகவும் மேடம் நு என்று பிரபலமாக அறியப்பட்ட இவர் 1955 முதல் 1963 வரை தென் வியட்நாமின் முதல் பெண்மணியாக இருந்தர். அதிபர் தி நாகோ தின் தியாமின் சகோதரரும் மற்றும் தலைமை ஆலோசகராக இருந்த நாகோ தின் நுவின் மனைவி ஆவார். அதிபர் டியாம் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததால் இவரும் இவரது குடும்பத்தினரும் சுதந்திரமாக அரண்மனையில் அதிபருடன் சேர்ந்து வாழ்ந்ததால், இவர் முதல் பெண்மணியாக கருதப்பட்டார்.

சில பௌத்த பிரிவினரின் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நாட்டில் வலுவான அமெரிக்காவின் செல்வாக்கைக் கண்டித்த இவரது கடுமையான கருத்துக்களுக்காக அறியப்பட்டார். அதிபர் தியாம் 1963இல் படுகொலை செய்யப்பட்ட பின்னர், இவர் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட்டார்.

ஆரம்ப ஆண்டுகளில் தொகு

"ஸ்பிரிங்ஸ் பியூட்டி" என்று பொருள்படும் திரான் லீ சுவான், பிரெஞ்சு இந்தோசீனாவின் ஹனோய் நகரில் ஒரு பணக்கார பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். பின்னர் பிரெஞ்சு காலனித்துவ பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. இவரது தந்தை தாத்தா பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்தார். அதே நேரத்தில் இவரது தந்தை திரான் வான் சாங், பிரான்சில் சட்டம் பயின்றவர். [2] மேலும் ஆளும் ஏகாதிபத்திய வம்சத்தில் திருமணம் செய்வதற்கு முன்பு மீகாங் டெல்டாவில் உள்ள பேக் லியூவில் பயிற்சி பெற்றவர். [3] இவரது தந்தை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழ் இந்தோசீனாவின் முதல் வெளியுறவு செயலாளராகவும் பணியாற்றினார். [4] இவரது தாயார், தான் தி திரான், பேரரசர் டோங் கானின் பேத்தி மற்றும் பேரரசர் பாவோ டேயின் உறவினராவார் . [5] [6]

கல்வி தொகு

லைசீ ஆல்பர்ட் சர்ராட்டில் லூ சுயானின் கல்வி முற்றிலும் பிரெஞ்சு மொழியில் இருந்தது. பிரெஞ்சு வரலாற்றைப் பற்றியும், வியட்நாமிய வரலாறு பற்றியும், பிரான்சின் காடுகள் மற்றும் மலைகள் பற்றிய பாடல்களைப் பாடுவதையும் பற்றி ஒரு பள்ளி மாணவியாக இவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. கல்வியின் நோக்கம் வியட்நாமிய அடையாளத்தை ஒழிப்பதும், இவரை ஒரு சரியான இளம் பிரெஞ்சு பெண்ணாக மாற்றுவதேயாகும். [6] வியட்நாமில் பிரெஞ்சு கல்விக் கொள்கைகளின் நோக்கம் வியட்நாமியர்களை "மஞ்சள் தோல் கொண்ட பிரெஞ்சுக்காரர்களாக" ஆக்குவதே ஆகும். பிரெஞ்சு ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு கற்பித்த செய்தி என்னவென்றால், பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்வது "நாகரிகம்" என்றும், வியட்நாமியராக இருப்பது "நாகரிகமற்றது" என்பதாகும்.

பிரெஞ்சு கற்றல் தொகு

ஹனோய் நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு பள்ளியான லைசி ஆல்பர்ட் சர்ராட்டில் இருந்து வெளியேறினார். இவர் வீட்டில் பிரஞ்சு பேசினார். வியட்நாமிய மொழியில் எழுத முடியவில்லை. இவர் தனது உரைகளை பிரெஞ்சு மொழியில் எழுதி அவற்றை வியட்நாமிய மொழியில் மொழிபெயர்த்தார். [2] பாலே மற்றும் பியானோவை நேசித்த ஒரு ஆணியல் பெண் என்ற முறையில் தனது இளமை பருவத்தில் புகழ் பெற்றார். ஒருமுறை ஹனோயின் தேசிய அரங்கில் தனியாக நடனமாடினார். [7]

திருமணம் தொகு

மே 1943 இல், இவரது 18 வயதில் இவரை விட பதினான்கு வயது மூத்தவரான நு என்பவரை திருமணம் செய்து கொண்டார். வியட்நாமிய வழக்கப்படி இவர் "சிறிய மருமகள்" என்று குறிப்பிடப்பட்டார். [8] [9] [10] நுவை மணந்தவுடன், மகாயான பௌத்தத்திலிருந்து இவரது கணவரின் மதமான ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார்.

மேற்கோள்கள் தொகு

  1. Joseph R. Gregory (26 April 2011). "Madame Nhu, Vietnam War Lightning Rod, Dies". New York Times. https://www.nytimes.com/2011/04/27/world/asia/27nhu.html?partner=rss&emc=rss. பார்த்த நாள்: 2011-04-26. 
  2. 2.0 2.1 Karnow, pp. 280–284.
  3. J. Lacouture, Vietnam: Between Two Truces, p. 79
  4. Lacouture, p. 79.
  5. The Royal Ark
  6. 6.0 6.1 Demery, Monique Finding the Dragon Lady, New York: Public Affairs, 2013 page 33.
  7. Jones, pp. 292–93.
  8. Prochnau, pp. 122–23.
  9. Demery, Monique Finding the Dragon Lady, New York: Public Affairs, 2013 page 37.
  10. Jones, p. 293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேடம்_நு&oldid=2932477" இலிருந்து மீள்விக்கப்பட்டது