மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு

மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு (Enhanced Fujita scale) அல்லது ஈஎப் ஒப்பளவு (EF scale) ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் சுழல் காற்றுக்களின் வலிமையை அவை ஏற்படுத்தும் சேதங்களைக் கொண்டு மதிப்பிடுவதாகும்.

தெத்துசுயா தியோடர் புஜித்தா 1971இல் அறிமுகப்படுத்திய புஜித்தா ஒப்பளவிற்கு மாற்றாக அமெரிக்காவில் பெப்ரவரி 1, 2007இலும் கனடாவில் ஏப்ரல் 18, 2013இலிருந்தும் இது செயற்பாட்டுக்கு வந்தது.[1] புஜித்தா ஒப்பளவைப் போன்றே அடிப்படை வடிவமைப்பைக் கொண்டுள்ளது: சூன்யத்திலிருந்து சேதம் கூடக்கூட அடுத்த எண்ணாக ஐந்து வரையிலும் ஆறு வகைப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்னதாக அகநிலையாகவும் தெளிவற்றும் இருந்தவற்றை மேம்பட்ட சீர்தரத்துடனும் தெளிவாகவும் இதில் வரையறுக்கப்பட்டுள்ளது.

கூறளவுகள் தொகு

கீழ்வரும் ஆறு வகைகளில், சேதங்கள் உயரும் வரிசையில், ஈஎப் ஒப்பளவு பட்டியலிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் சேதங்களின் ஒளிப்பட காட்டுகளும் இற்றைப்படுத்தப்பட்டபோதும் சேத விவரங்கள் புஜித்தா ஒப்பளவை ஒட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையான ஈஎப் ஒப்பளவு மதிபீட்டில் சேதக் குறியீடுகள் (எந்த வகையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது) முக்கிய பங்காற்றுகின்றன.[2]

ஒப்பளவு காற்றின் வேகம்
(மதிப்பீடு)[3]
சேதத்திற்கான எடுத்துக்காட்டு
மணிக்கு மைல் மணிக்கு கிமீ
ஈஎப்0 65–85 105–137  
ஈஎப்1 86–110 138–178  
ஈஎப்2 111–135 179–218  
ஈஎப்3 136–165 219–266  
ஈஎப்4 166–200 267–322  
ஈஎப்5 >200 >322  

சேதக் குறியீடுகளும் சேதங்களின் மதிப்புநிலையும் தொகு

ஈஎப் ஒப்பளவில் தற்போது 28 சேதக் குறியீடுகளும் (டிஐ), அல்லது கட்டமைப்பு மற்றும் வனாந்தர வகைகளும், அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு சேத மதிப்புநிலைகளையும் (டிஓடி) வரையறுக்கப்பட்டுள்ளன.[4]

டிஐ எண். சேதக் குறியீடு (டிஐ) சேத மதிப்புநிலை (டிஓடி)
1 சிறு தானியக்களஞ்சியம் அல்லது வேளாண் கட்டிடம் 8
2 ஒரு- அல்லது இரு-குடும்ப வீடுகள் 10
3 தயாரிக்கப்பட்ட வீடு – ஒற்றை அகலம் (MHSW) 9
4 தயாரிக்கப்பட்ட வீடு – இரட்டை அகலம் (MHDW) 12
5 அடுக்ககங்கள், குடியிருப்புகள், மூன்றுமாடிக் கட்டிடங்கள் (ACT) 6
6 மோட்டல் (M) 10
7 கட்டப்பட்ட அடுக்ககம் அல்லது மோட்டல் கட்டிடம் (MAM) 7
8 சிறு சில்லறை கட்டிடம் [விரைவுணவு விடுதிகள்] (SRB) 8
9 சிறு தொழில்முறை கட்டிடம் [மருத்துவரின் அலுவலகம், வங்கிக் கிளைகள்] (SPB) 9
10 ஸ்டிரிப் மால் (SM) 9
11 பெரிய வணிக வளாகம் (LSM) 9
12 பெரிய, ஒதுக்குப்புற சில்லறை வணிக கட்டிடம் [கே-மார்ட், வால்-மார்ட்] (LIRB) 7
13 தானுந்து காட்சி விற்பனையகம் (ASR) 8
14 தானுந்து சீர்சேவை கட்டிடம் (ASB) 8
15 துவக்கப் பள்ளி [ஒற்றை மாடி; உள் அல்லது வெளி கூடங்கள்] (ES) 10
16 இளநிலை அல்லது முதுநிலை உயர்நிலைப் பள்ளி (JHSH) 11
17 குறைந்த-உயர கட்டிடம் [1–4 மாடிகள்] (LRB) 7
18 நடுத்தர-உயர கட்டிடம் [5–20 மாடிகள்] (MRB) 10
19 கூடிய-உயரக் கட்டிடம் [20 மாடிகளுக்கு மேலான] (HRB) 10
20 நிறுவன கட்டிடம் [மருத்துவமனை, அரசு அல்லது பல்கலைக்கழக கட்டிடம்] (IB) 11
21 மாழை கட்டமைப்பு (MBS) 8
22 சீர்சேவை நிலைய கவிகை (SSC) 6
23 பண்டகசாலை கட்டிடம் [மேலே சாய்ந்த சுவர்கள் அல்லது கூடிய வெட்டுமர கட்டமைப்பு] (WHB) 7
24 மின் செலுத்துத் தொடர் (ETL) 6
25 தனித்து நிற்கும் கோபுரங்கள் (FST) 3
26 தனித்து-நிற்கும் ஒளிவிளக்குத் தூண்கள், குவியொளி தூண்கள், கொடி மரங்கள் (FSP) 3
27 மரங்கள்: வன்மரம் (TH) 5
28 தரங்கள்: மென்மரம் (TS) 5

மேற்சான்றுகள் தொகு

  1. http://www.theweathernetwork.com/news/storm_watch_stories3&stormfile=Assessing_tornado_damage__EF-scale_vs._F-scale_19_04_2013?ref=ccbox_homepage_topstories Assessing tornado damage: EF-scale vs. F-scale
  2. "The Enhanced Fujita Scale (EF Scale)". Storm Prediction Center. 2007-02-02. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  3. "Enhanced F Scale for Tornado Damage". Storm Prediction Center. பார்க்கப்பட்ட நாள் 2009-06-21.
  4. James R. McDonald; Kishor C. Mehta (10 October 2006). A recommendation for an Enhanced Fujita scale (EF-Scale). Lubbock, Texas: Wind Science and Engineering Research Center. http://www.wind.ttu.edu/EFScale.pdf. பார்த்த நாள்: 2009-06-21. 

வெளி இணைப்புகள் தொகு