மேயோ கல்லூரி மைதானம்

மேயோ கல்லூரி மைதானம் (Mayo College Ground) இந்தியாவின் இராசத்தன் மாநிலத்தில் உள்ள அச்மீரின் உள்ள மேயோ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. ஆரவல்லி மலைத்தொடரின் பார்வையுடன் அழகான பழைய சிவப்பு மணற்கல் கூடாரம் ஆகியவற்றைக் கொண்ட கால்பந்து, வளைகோல் பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டத் திடல் உள்ளிட்ட வசதிகள் இங்குள்ளன. [1] [2] மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு வசதிகளை இம்மைதானம் அளிக்கிறது.

மேயோ கல்லூரி மைதானம்
Mayo College Ground
அமைவிடம்மேயோ கல்லூரி, அச்மீர், இராசத்தான்
உருவாக்கம்1875
இருக்கைகள்200
உரிமையாளர்மேயோ கல்லூரி
மூலம்: Mayo College

கண்ணாடிச் சுவர் பின்னணியில் திறந்த வெளி சுவர்ப்பந்து விளையாட்டுத் திடல் இங்கு அமைந்துள்ளது.[3][4] மேயோ கல்லூரியில் ஒன்பது துளைகள் கொண்ட புதியதாக்க் கட்டப்பட்ட குழிப்பந்து மைதானம் ஒன்றும் உள்ளது.[5] பல கூடைப்பந்து மைதானங்களையும் இம்மைதானம் கொண்டுள்ளது. ஒரு நிலையான 400 மீட்டர் ஓடுபாதை ஒன்றும் இங்கு உள்ளது.பருவகால மற்றும் பயிற்சி விளையாட்டுகளில் தடகளமும் ஒன்றாகும். வளாகத்தில் சுமார் 17 வலைப்பந்து திடல்களும் உள்ளன.பத்து மீட்டர் தொலைவில் இலக்கு நியமித்து குறிபார்த்துச் சுட்டும் துப்பாக்கி சுதல் விளையாட்டுக்கான சிறப்பான பயிற்சி வசதிகள் இங்கு கிடைக்கின்றன.

1926 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை இங்கு 19 முதல் தரப் போட்டிகள் நடந்துள்ளன. அதன் பின்னர் இம்மைதானம் முதல் தர போட்டிகள் எதையும் நடத்தவில்லை. ஆனாலும் அப்போது முதல் முதல் தரப் போட்டிகளாகக் கருதப்படாத போட்டிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.[6]

மேற்கோள்கள் தொகு

  1. Cricket பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
  2. Football பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
  3. Squash பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
  4. Hockey பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
  5. Golf பரணிடப்பட்டது 2015-04-05 at the வந்தவழி இயந்திரம்
  6. First-class matches

 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயோ_கல்லூரி_மைதானம்&oldid=3191628" இலிருந்து மீள்விக்கப்பட்டது