மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்

மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மேற்கு மாம்பலம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2] இக்கோயிலின் கும்பாபிசேகம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் நாள் நடைபெற்றது.[3][4] ஏழு நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் கிழக்குத் திசையிலும் நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரம் ஒன்று தெற்குத் திசையிலும் அமைந்துள்ளன.

மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்
மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்
மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில்
ஆள்கூறுகள்:13°02′09″N 80°13′31″E / 13.0359°N 80.2252°E / 13.0359; 80.2252
பெயர்
வேறு பெயர்(கள்):மகாபில்வஷேத்திரம்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:மேற்கு மாம்பலம்
சட்டமன்றத் தொகுதி:தியாகராய நகர்
மக்களவைத் தொகுதி:தென் சென்னை
ஏற்றம்:54 m (177 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காசி விசுவநாதர்
தாயார்:காசி விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
அறுபத்து மூவர் திருவிழா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று
வரலாறு
கட்டிய நாள்:கி. பி. பதினேழாம் நூற்றாண்டு[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 54 மீட்டர் உயரத்தில், 13°02′09″N 80°13′31″E / 13.0359°N 80.2252°E / 13.0359; 80.2252 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயில் அமைந்துள்ளது.[1]

இக்கோயிலின் மூலவர் காசி விசுவநாதர்; தாயார் காசி விசாலாட்சி ஆவர். அர்த்தநாரீசுவரர், காமாட்சி அம்மன், திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அறுபத்து மூவர், சரபேசுவரர், பிரத்யங்கரா தேவி, கருடாழ்வார், கால பைரவர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "மேற்கு மாம்பலத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை குடமுழுக்கு". Hindu Tamil Thisai. 2023-09-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  2. "Kasi Viswanathar Temple, West Mambalam, Chennai". greenmesg.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  3. Maalaimalar (2023-09-06). "மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  4. "1000ஆவது குடமுழுக்கு விழா கோலாகலம்: முதல்வர் பெருமிதம்!". மின்னம்பலம் (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.
  5. "Arulmigu Kasi Viswanathaswami And Ellaiamman Temple, Mambalm, Chennai - 600033, Chennai District [TM000180].,Kasi Viswanathar temple,Kasi Viswanathar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.

வெளி இணைப்புகள் தொகு