மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்

மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் மிகவும் பெரிய இடமாக இருந்தாலும், இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் மாவட்டமாகும்.

மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
மேல் டிபாங் பள்ளத்தாக்குமாவட்டத்தின் இடஅமைவு Arunachal Pradesh
மாநிலம்Arunachal Pradesh, இந்தியா
தலைமையகம்அனினி
பரப்பு9,129 km2 (3,525 sq mi)
மக்கட்தொகை7,948 (2011)
நகர்ப்புற மக்கட்தொகை27.55%
படிப்பறிவு64.8%
பாலின விகிதம்808

அமைப்பு தொகு

மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் அருகில் உள்ள லோஹித் மாநிலத்தில் இருந்து பிரித்து, 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். இந்த நகரம் டிபாங் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக அனினி நகரம் உள்ளது. இந்த மாவட்டம் ஒரு சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.

மக்கள் தொகு

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி மற்றும் இடி இனத்தை சேர்ந்தவர்கள்.

மொழி தொகு

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள் தொகு

1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டிபாங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு