மே. மு. அக்பர்
மேலவீட்டில் முகம்மது அக்பர் (Meleveettil Muhammad Akbar) ( மலையாளம் : മേലേവീട്ടില് മുഹമ്മദ് അക്ബര്) ஓர் இசுலாமிய போதகராவார். [1] இவர், கேரளாவின் மலப்புறத்தில் ஒரு பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது மாண நாட்களில், அக்பர் முஜாஹிதீன் மாணவர் இயக்கத்துடன் தொடர்பிலிருந்தார். இவர் ஒரு சொற்பொழிவாளராக அறியப்பட்டாலும், முஸ்லிம் அறிஞராக இருக்க எந்த கல்விப் பயிற்சியும் இல்லை.[2] கேரளாவை தளமாகக் கொண்ட "நிச் ஆஃப் ட்ரூத்" என்ற இசுலாமிய அமைப்பின்[3] [4] இயக்குநராக இருக்கிறார். மேலும், கொச்சியிலிருந்து வெளியிடப்பட்ட சினேகா சம்வதம் என்ற பத்திரிகையின் ஆசிரியருமாவார்.[5] இசுலாமிய தீர்க்கதரிசி முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றி மலையாளத்தில் முதல் வலைத்தளத்தை "நிச் ஆஃப் ட்ரூத்" உருவாக்கியுள்ளது. கொச்சியிலிருந்து இயங்கும் இந்த அமைப்பின் நோக்கம் இந்தியாவின் பன்மைத்துவ சமுதாயத்தின் முன் இசுலாத்தை ஒரு விரிவான மதமாக முன்வைப்பதாகும்.
மே. மு. அக்பர் | |
---|---|
2019இல் மே. மு. அக்பர். | |
பிறப்பு | 1968 (அகவை 55–56) பரப்பனங்காடி, மலப்புறம், கேரளம், இந்தியா. |
தேசியம் | இந்தியா |
பணி | இசுலாமிய போதக, எழுத்தாளர். "நிச் ஆஃப் ட்ரூத்" என்ற இசுலாமிய அமைப்பின் இயக்குநர் சினேகா சம்வதம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் |
வலைத்தளம் | |
www.nicheoftruthonline.com |
இவர், அமைதி அறக்கட்டளையால் நடத்தப்படும் 13 பள்ளிகளின் சங்கிலியான "அமைதி சர்வதேச பள்ளி"யின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அதன் பாடத்திட்டத்தின் மூலம் வகுப்புவாத பிரிவை ஊக்குவிப்பதாக கண்டறியப்பட்டதால் சங்கிலி சர்ச்சைக்குள்ளானது.[6] [7]
2018 ஜனவரியில், கேரள அரசு அமைதிப் பள்ளிகளை மூட உத்தரவிட்டது . மேலும், அக்பரை கைது செய்ய ஒரு அனுமதியும் அளித்தது. கொச்சி காவல்துறையினர் இவரை 25 பிப்ரவரி 2018 அன்று கைது செய்தனர்.[8]
அக்பருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தற்போது அனைத்து அமைதி பள்ளிகளும் சாதாரணமாக செயல்பட்டு வருகின்றன. வகுப்புவாத பிரிவை ஊக்குவிக்கும் எந்தவொரு பொருளும் பள்ளி பாடத்திட்டத்தில் உயர் நீதிமன்றத்தால் கண்டறியப்படவில்லை.[9]
மேற்கோள்கள் தொகு
- ↑ Prashanth M. P. (May 21, 2017). "Peace International School: M M Akbar refutes Rashid Abdulla's claims | Kozhikode News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
- ↑ "A Kerala preacher and the textbook controversy in his chain of schools". The Indian Express (in ஆங்கிலம்). 2018-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
- ↑ "Arab News, 10 September 2003 Wednesday (13 Rajab 1424), Article: Muslims Must Adopt a Positive Approach". Archived from the original on 30 March 2012.
- ↑ "The Hindu, 28 Jan 2004, Kochi Edition, Call to promote regional history". Archived from the original on 2013-01-25.
- ↑ "Dubai International Peace Convention, March 2010, Biographies of Speakers". Archived from the original on 20 June 2010.
- ↑ Aravind, Indulekha (31 July 2016). "Why a section of Kerala's Muslim youth is treading a radical path". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-a-section-of-keralas-muslim-youth-is-treading-a-radical-path/articleshow/53468470.cms.
- ↑ Krishna, Srikanth. "Kerala CM orders closure of Peace International School after it was found teaching communal content". International Business Times, India Edition. http://www.ibtimes.co.in/kerala-cm-orders-closure-peace-international-school-after-it-was-found-teaching-communal-content-755702.
- ↑ "Head of Kerala's Peace School MM Akbar tries to flee country, nabbed at Hyd airport". The News Minute. February 25, 2018. பார்க்கப்பட்ட நாள் 27 February 2018.
- ↑ "Peace International chief Akbar gets bail" (in en). The Hindu. 10 March 2018. https://www.thehindu.com/news/national/kerala/peace-international-chief-akbar-gets-bail/article23010748.ece.
வெளி இணைப்புகள் தொகு
- Niche of Truth பரணிடப்பட்டது 2021-03-04 at the வந்தவழி இயந்திரம் (official website)
- Muhammed Nabi.info பரணிடப்பட்டது 2019-01-15 at the வந்தவழி இயந்திரம் (first Muhammad Nabi website in Malayam)